இந்த மரத்தின் அருகில் ரசித்து ரசித்து ஷாட் வைத்தேன் – வேரோடு சாய்ந்த மரம் குறித்து சேரன் உருக்கமான பதிவு. (எந்த படம் தெரியுதா ? )

0
426
cheran
- Advertisement -

காலங்காலமாக சென்னையில் பருவமழை காரணமாக பல பகுதிகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து செல்லுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. இதனால் பல வீடுகளில் தண்ணீர் புகுந்தும், மின்சாரம் பாதிக்கப்படுவது, அடிப்படை தேவைகள் கூட இல்லாமல் மக்கள் தவிப்பது என பல பிரச்சனைகளை மக்கள் சந்தித்து வருகின்றார்கள். அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதைத் தொடர்ந்து தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் சில தினங்களாகவே தொடங்கிய மழை கொஞ்சம் கூட பிரேக் எடுக்காமல் பெய்தது பெய்த படியே உள்ளது.

-விளம்பரம்-

இதனால் சென்னையில் பெரும் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு முக்கியமான ஏரிகளில் நீர் இருப்பு கிடுகிடுவென உயர்ந்து இருப்பதால் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் பல்வேறு பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும், பல பகுதிகளில் வீட்டுக்குள் மழைநீர் புகுந்து இருப்பதால் மோட்டார் மூலம் மழைநீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர்முதல் சாதாரண மக்கள் வரை என பலரும் தங்களால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் சோசியல் மீடியாவில் சென்னை மழை குறித்து பலரும் பலவிதமான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையின் கனமழையால் சென்னை ஃபிலிம் சிட்டியில் இருந்த பழமையான மரம் ஒன்று சாய்ந்து விழுந்து இருந்தது. இதுகுறித்து சேரன் அவர்கள் தன்னுடைய உருக்கமான பதிவை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, சென்னை ஃபிலிம் சிட்டியில் உள்ள பழங்கால மரம் ஒன்று வேரோடு சாய்ந்து இருக்கிறது. ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை என்ற படத்தில் ஒரு முக்கியமான காட்சியை அந்த மரத்தின் அருகில் இருந்து தான் நான் ரசித்து ரசித்து எடுத்தேன்.

மேலும், உருவாக்குவது கஷ்டம், ரொம்ப வருஷம் செலவாகும். ஆனால், அளிக்கிறத்துக்கு ஒரு நிமிஷம் போதும். இந்த மரம் 65 வருடங்களால் ஆனது. ஆனால், ஒரு பெரும் சீற்றத்தால் அழிந்துவிட்டது. நம் வாழ்வு கூட அப்படித்தான். எல்லாவற்றிற்குமே நிதானம் தேவை என்று உணர்வுபூர்வமான பதிவை பதிவிட்டு ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தின் சில புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தார். தற்போது சேரனின் இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement