4வது கிலோ மீட்டர்ல ஒரு ஊனமுற்ற மாணவர் – சைக்கிள் உலக தினத்தில் தனது ஆட்டோகிராப் கதை சொன்ன சேரன்.

0
805
cheran
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் சேரனும் ஒருவர். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களை இயக்கியும், நடித்தும் உள்ளார். அந்த வகையில் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. வசூல் சாதனை பெற்றது என்றும் சொல்லலாம்.இந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடல் தேசிய விருது பெற்றது.

-விளம்பரம்-

சேரன் அவர்கள் இயக்கிய பல படங்களுக்காக தேசிய விருதுகளை வாங்கி உள்ளார்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். சேரன் படங்கள் என்றால் அதில் நிச்சயம் சைக்கிள் இடம்பெற்று விடும். பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை இவரை சைக்கிளை பலரும் காலாய்த்தார்கள். அவ்வளவு ஏன் பிக் பாஸ் 3 கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கூட சாண்டி சைக்கிளை வைத்து தான் சேரனை கலாய்த்து இருப்பார்.

இதையும் பாருங்க : சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள நடிகை சோனா – அதுவும் எந்த சேனல் ? என்ன சீரியல் தெரியுமா ?

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இன்று உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு ட்விட்டரில் ரசிகை ஒருவர், சேரன் படத்தில் பயன்படுத்தப்பட்ட சைக்கிள் காட்சிகளை தொகுத்து, சேரன் படத்தில் வரும் சைக்கிள் காட்சிகள் காட்சி பொருளாக மட்டும் இருப்பது இல்லை . விடாமுயற்சி, உழைப்பு, கூட்டுறவு, வசதி மற்றும் மனநிறைவு ஆகியவற்றின் வாழ்க்கையின் உருவகங்களை விவரிப்பதில் அது ஒரு முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. அவர் எண்ணங்களில் உருவம் கொண்டவர் என்று கூறி இருந்தார்.

இதற்கு பதில் அளித்த சேரன், வாவ், சைக்கிள் டே எல்லாம் இருக்கா, சைக்கிள படத்துல அதிகம் பயன்படுத்தியது நான் தான். பிக் பாஸ்ல சாண்டி கலாய்ச்சிருப்பாரே. ஆம், தினமும் 9 + 9 கிலோ மீட்டர் சைக்கிள் ஒட்டி போய்தான் +2 படிச்சேன். அந்த பயணத்தில் இருக்கற கதைகள் வேற, 4வது கிலோ மீட்டர்ல ஒரு ஊனமுற்ற மாணவர் தினமும் என் சைக்கிள்ல தான் பிக்கப் டிராப் என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement