சாதி வேண்டாம் போடா என்று அம்பேதகர் புகைப்படத்தை பதிவிட்ட காஜல் – இட ஒதிக்கீடை குறிப்பிட்டு சேரன் பதிலால் கடுப்பான ரசிகர்கள்.

0
1467
cheran
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் சேரனும் ஒருவர். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் சொல்ல மறந்த நடிகரும் தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களை இயக்கியும், நடித்தும் உள்ளார். அந்த வகையில் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. சமீபத்தில் சினிமாவில் கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்ட சேரன் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பேசப்பட்டார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இந்தி திணிப்பு விவாகரத்தில் சேரன் சொன்ன கருத்து நெட்டிசன்கள் மத்தியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியை கட்டாய படமாக படிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. மேலும், தேசிய கல்வி கொள்கையில், நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டது.பல மாநிலங்கள் இந்த கொள்கையை ஏற்ற நிலையில், இந்த கொள்கை இந்தியை திணிக்கும் முயற்சி என தமிழகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

- Advertisement -

தமிழகத்தில் தற்போது மீண்டும் இந்தி எதிர்ப்பு அரசியல் தலை தூக்க துவங்கி உள்ளது. மேலும், பல்வேறு பிரபலங்கள் கூட இந்தி தெரியாது போடா என்ற டி-ஷர்ட்டை அணிந்து இந்தி திணிப்பிற்கு எதிராக தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான காஜல் தனது ட்விட்டர் பக்கத்தில் அம்பேத்கர் புகைப்படத்தை பதிவிட்டு ‘ஜாதி வேண்டாம் போடா’ என்று பதிவிட்டு இருந்தார்.

அதற்கு கமன்ட் செய்த சேரன் ‘இவர் இதை குறிப்பிட்டு எத்தனையோ வருடங்கள் ஓடிய பின்னும் இன்னும் இதை குறிப்பிடுகிறோம் என்றால் என்ன சொல்ல இந்த சுயநல சமுதாயத்தை சாதிப்பெயரை சொல்லி ஒதுக்கும் கூட்டமும் சாதிப் பெயர் சொல்லி சலுகைகளை அனுபவிக்கும் பல பிரிவினரும் இதற்கு காரணமாகிறார்கள் நீங்குவது எளிதல்ல’ என்று பதிவிட்டிருந்தார். ஆனால், பதிவிட்ட சில நிமிடங்களில் அந்த பதிவை நீக்கிவிட்டார் சேரன்.

-விளம்பரம்-

சேரனின் இந்த பதிவை கண்ட ட்விட்டர் வாசி ஒருவர்’இவனை எல்லாம் ஒரு காலத்தில் சிறந்த இயக்குனர்ன்னு கொண்டாடினதுக்கு வெக்கப்படுகிறேன். இவ்ளோ முட்டாளா? சாதி வன்மம் உள்ள ஆளா?? ச்சைக்’ என்று சேரனை கடுமையாக விமர்சித்து இருந்தார். அந்த நபரை சேரன் பிளாக் செய்து விட ‘சாதிய வன்மத்தோடு இருந்த சேரனின் பதிவில் நான் இட்ட இந்த பதிலுக்காக சில்ற சேரனால் ப்ளாக் செய்யப்பட்டேன் என்பதை இந்த சந்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்’என்று அந்த ட்விட்டர் வாசி பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement