இயக்குனர் சேரனா இது.! சின்ன வயசுல எப்படி இருக்கார் பாருங்க.! அறிய புகைப்படம் இதோ.!

0
8256
Cheran

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு பிரபலங்கள் பங்கு பெற்றுள்ளார் அதில் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் என்றால் அது இயக்குனர் சேரன் தான். தமிழ் சினிமாவில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த சேரன் சமீபகாலமாக திரைத்துறையில் தோல்வியை சந்தித்து வந்தார். இதனால் ஒரு மாற்றத்திற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார் சேரன்.

பிக்பாஸ் வீட்டிற்குள் சேரன் மற்ற போட்டியாளர்களால் மரியாதை குறைவாக நடத்தப்பட்டபோது தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு இயக்குநர்கள் தங்களது வருத்தங்களை தெரிவித்திருந்தனர். மேலும், தேசிய விருது பெற்ற ஒரு இயக்குனர் இதுபோன்ற நிகழ்ச்சியில் பங்கேற்று தனது மரியாதையை குறைத்துக்கொண்டு வருகிறார் என்றும் பலரும் புலம்பி வந்தனர்.

இதையும் பாருங்க : அவ்ளோ சண்ட போட்டாங்க.! இப்போ மீரா கூடவே பேஷன் ஷோ பண்ணியுள்ள போட்டியாளர்.! 

- Advertisement -

இந்த நிலையில் நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு அவரவர் ஆசிரியர்கள் தொடர்பு கொண்டு பேசி இருந்தனர். அப்போது பிரபல இயக்குனரான கேஎஸ் ரவிக்குமார் சேரனுக்கு கால் செய்து பேசிக் கொண்டிருந்தார். மேலும், சேரன் தன்னிடம் துணை இயக்குனராக பணியாற்றி உள்ளார் எனவும், இன்றும் அவர் தன்னுடைய சிறந்த சிஷ்யன் தான் என்றும் கூறியிருந்தார் கேஎஸ் ரவிக்குமார். இந்த உரையாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தது.

Image result for cheran rare photos

ஆரம்ப காலத்தில் துணை இயக்குனராக பணியாற்றி வந்த சேரன் கே எஸ் ரவிக்குமார் பல்வேறு படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் சேரன் தனது இளம் வயதில் கேஎஸ் ரவிக்குமாருடன் இருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் சேரன் அடையாளம் தெரியாத அளவிற்கு மிகவும் ஒல்லியாக இருக்கிறார்.

-விளம்பரம்-

Advertisement