அவ்ளோ சண்ட போட்டாங்க.! இப்போ மீரா கூடவே பேஷன் ஷோ பண்ணியுள்ள போட்டியாளர்.!

0
5912
sakshi-abhirami

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவிற்கு பின்னர் அதிகம் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான். மாடல் அழகியாக தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளும் மீரா மிதுன் பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கியதால் இவரது பெயர் மிகவும் டேமேஜ் ஆனது. அதுமட்டுமல்லாமல் இவர்,சேரன் மீது வைத்த குற்றச்சாட்டால் ரசிகர்களால் மிகவும் வெறுக்கப்ட்டார். இதனால் ரசிகர்கள் மத்தியில் கெட்ட பெயரை எடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் மீரா மிதுன்.

Meera

- Advertisement -

மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த முதல் நாள் முதலே இவருக்கும் சாக்ஷி, அபிராமி ஆகிய இருவருக்கும் பல்வேறு சண்டைகளும் வெடித்தன. அபிராமி மற்றும் சாக்ஷிக்கு மீராமிதுன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதே பிடிக்கவில்லை அதற்கான காரணத்தை சொன்ன அவர்கள் மீராமிதுன் பல்வேறு மோசடி வேலைகளில் ஈடுபட்டு உள்ளதாகவும் கூறி இருந்தனர். ஆனால் , மீராமிதுன் தான் அபிராமியை தான் மாடலிங் துறைக்கு அறிமுகம் செய்தேன் என்றும் கூறியிருந்தார்.

இதையும் பாருங்க : முன் ஜன்னல் வைத்த ஆடையில் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா.! ச்சீசீ சொன்ன ரசிகர்கள்.! 

அதனை ஒப்புக்கொண்ட அபிராமி அதன்பின்னர் மீராவிடம் கொஞ்சம் பட்டும் படாமல் பேசி வந்தார். இருப்பினும் இவர்கள் மத்தியில் இருந்த வெறுப்புகள் குறையாமல் தான் இருந்தது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மீரா மிதுன் மற்றும் சாக்க்ஷி ஒரு பேஷன் ஷோவில் பங்கு பெற்றுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது

-விளம்பரம்-
Sakshi

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் பிரபல இயக்குனரான ரஞ்சித்தின் மனைவி வடிவமைத்த ஆடைகளை மாடல் அழகிகள் அணிந்து ஒய்யார நடையில் உலா வந்தனர். அதேபோல இந்த நிகழ்ச்சியில் சாக்க்ஷி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை எதிரும் புதிருமாக இருந்த இவர்கள் இருவரும் தற்போது ஒரு நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளது ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Meera

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement