கொரோனா பாதிப்பில் மக்களுக்காக களமிறங்கிய ஒரே பிக் பாஸ் நடிகர் இவராதான் இருப்பாரு.

0
57994
dhanush
- Advertisement -

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகமாகி கொண்டே செல்கிறது. இதுவரை கொரோனாவினால் 5274 பேர் பாதிக்கப்பட்டும், 149 பேர் பலியாகியும் உள்ளனர். இதனால் கொரோனா பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதால் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். இந்த சூழலில் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக நாடு முழுவதும் உணவு தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டு உள்ளது.

-விளம்பரம்-

கொரோனவினால் ஏழை மக்கள், ஆதரவற்றோர், கூலி வேலை செய்பவர்கள் என பலர் வாழ்வாதரத்திற்காக கஷ்டப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு சினிமா பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். நிறைய பேர் பிரதமர் மோடி நிவாரண நிதி மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணத்தை கொடுத்து வருகிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி நடிகர் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சூர்யா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களால் முடிந்த பண உதவிகளை செய்து வருகிறார்.

இதையும் பாருங்க : நடு ரோட்டில் நடந்த ஷூட், கேரவன் இல்லாததால் தமன்னா எப்படி உடையை மாற்றியுள்ளார் பாருங்க.

- Advertisement -

நேற்று கூட தல அஜித் அவர்கள் 1.25 கோடி ரூபாய் பணத்தை நிதி உதவியாக அரசாங்கத்திற்கு கொடுத்து உள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் பிரபலம் டேனியல் அண்ணி போப் அவர்களும் தன்னால் முடிந்த உதவிகளை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து உள்ளார். இவர் சாப்பாடு, பிஸ்கட், மாஸ்க், தண்ணி பாட்டில் என்று அத்தியாவசிய தேவைகளை எல்லாம் ஏழை மக்களுக்கும் கொடுத்து உள்ளார்.

மேலும், நடிகர் டேனியல் ஆன்னி போப் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார். மேலும், நடிகர் டேனியல் ஏழை மக்களுக்கு மாஸ்க் அணிந்த வீடியோவும் வெளியாகியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் என்னுடைய சேலஞ்சை முடித்துவிட்டேன் என்றும் தனுஷ், இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர் கௌதம் கார்த்திக்,மியூசிக் டைரக்டர் அணிருத், ரம்யா நம்பீசன் என்று பல பேருக்கு இதை பன்னுங்கள் என்றும் சேலன்ஜ் மூலம் சவால் விடுத்த மாதிரி பதிவிட்டுள்ளார்.

இதையும் பாருங்க : 2013 – செய்தி வாசிப்பாளராக சேர்வதற்கு முன் முதல் நாள் – பிரியா பவானி சங்கர் பகிர்ந்த பதிவு.

-விளம்பரம்-

இதனை இவருடைய நண்பர்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார்கள். தற்போது இது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதன் மூலமாவது பிற நடிகர்கள் முன்வந்து உதவி செய்வார்களா? என்ற நோக்கத்தில் இவர் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவர் 2007 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த பொல்லாதவன் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.

ஆனால், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது விஜய் சேதுபதியின் நடிப்பில் வந்த இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் மூலம் தான். அதிலும் பிரெண்டு லவ் மேட்டரு ஃபீல் என்ற ஒரு டயலாக் மூலமே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார். அதனை தொடர்ந்து மாசு என்கிற மாசிலாமணி, ரங்கோன் போன்ற பல படங்களில் நடித்து வந்தார். பின் இவர் தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

Advertisement