2013 – செய்தி வாசிப்பாளராக சேர்வதற்கு முன் முதல் நாள் – பிரியா பவானி சங்கர் பகிர்ந்த பதிவு.

0
3446
priyabhavani

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே முன்னனி நடிகையாக வளர்ந்து இருக்கிறார் நடிகை ப்ரியா பவானி சங்கர். இவர் செய்தி வாசிப்பாளராக தான் தனது கெரியரை துவங்கியவர். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ தொடரில் நடித்தார். இவர் நடித்த முதல் சீரியலிலேயே தனெக்கென ரசிகர் படையை சேர்த்தார். தற்போது வெள்ளித்திரையில் பட்டைய கிளப்பி கொண்டு இருக்கிறார். இவர் மேயாதமான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பின் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

Priya Bhavani Shankar's role in next movie revealed! - Tamil News ...

- Advertisement -

சமீபத்தில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஃபியா படத்திலும் நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து இருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை பிரியா பவானி சங்கர் அவர்கள் நல்ல நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் அவர்கள் சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்தபோது வாங்கிய முதல் சம்பளத்தை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் பாருங்க : பாய்ஸ் பட வாய்ப்பு, ராணுவ பயிற்சி, ஷங்கர் அட்வைஸ், அந்நியன் பட பாடல் – வாழ்க்கையின் பல்வேறு வலிகளை பகிர்ந்த நகுல்.

கொரோனாவினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பிரபலங்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் தனது ரசிகர்களுடன் சாட் செய்து வருகிறார்கள். பிரபலங்கள் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில்களையும் அளிக்கிறார்கள். அப்படி நடிகை ப்ரியாவும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் சாட் செய்தார்.

-விளம்பரம்-
Priya Bhavani Shankar: News Bullettin

அதில் ரசிகர் ஒருவர் உங்களுடைய முதல் சம்பளம் எவ்வளவு என்று கேட்டார். அதற்கு பிரியா பவானி சங்கர் அளித்த பதில் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதில் நடிகை பிரியா கூறியது, நான் செய்தி வாசிப்பாளராக இருந்த போது ஒரு நியூஸ் புல்லடினுக்கு ரூ. 360 சம்பளம் கிடைத்தது என்று ப்ரியா தெரிவித்தார். அதே போல முதல் ஆறு மாதம் எந்த சம்பளமும் வாங்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் பாருங்க : பாப்லிசிட்டி பாஸ், குட்டி புலி வில்லன் நடிகரின் உதவியை கேலி செய்த நபர். ஆதரவாக களமிறங்கிய நெட்டிசன்கள்

வெறும் ரூ. 360 சம்பளத்தில் தானா கெரியரை தொடங்கினீர்களா? இன்று நீங்கள் இந்த அளவுக்கு உயர்ந்து நிற்பதை பார்க்கவே பெறுமையாக உள்ளது. உங்களை பார்க்கும்போது எங்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுகிறது என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இவர் இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி “பொம்மை” படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் கூடிய விரைவில் திரையரங்கிற்கு வரப்போகிறது.

https://www.instagram.com/p/B-roZVeDCUe/

மேலும், பிரம்மாண்ட இயக்குனரான சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்திலும் பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஹாரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து களத்தில் சந்திப்போம், விக்ரம் 58வது படம், கசடதபற, குருதி ஆட்டம் போன்ற பல படங்களில் கமிட்டாகி படு பிஸியாக உள்ளார்.

Advertisement