நடு ரோட்டில் நடந்த ஷூட், கேரவன் இல்லாததால் தமன்னா எப்படி உடையை மாற்றியுள்ளார் பாருங்க.

0
16285
tamanna
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை தமன்னா . 2005 ஆம் ஆண்டு சந் சா ரோஷன் செகரா என்னும் படத்தின் மூலம் சினிமா உலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணா நடித்த ‘கேடி’ என்ற படத்தில் தமன்னா அவர்கள் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானார். தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடிகை தமன்னா நடித்து உள்ளார். மேலும், நடிகை தமன்னாவிற்கு பாகுபலி திரைப்படம் தான் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

-விளம்பரம்-
Paiyaa on Moviebuff.com

- Advertisement -

என்னதான் கேடி படத்தின் மூலம் அறிமுகமானாலும் தமன்னாவிற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ கார்த்தி நடிப்பில் வெளியான பையா திரைப்படம் தான். . இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு கார்த்திக் மற்றும் தமன்னா நடிப்பில் வெளி வந்த படம் தான் பையா. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பையா படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காதல் கதை.

இதையும் பாருங்க : சக்ஸஸ் பார்ட்டியில் விஜய் மற்றும் அட்லீ போட்ட குத்தாட்டம். வைரலாகும் வீடியோ.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசை அமைத்திருந்தார். படத்தின் ஒவ்வொரு பாடல்களும் வேற லெவல்ல ரசிகர்களை கவர்ந்தது. சமீபத்தில் பையா படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் இயக்குனர் லிங்குசாமி இயக்குனர் லிங்குசாமி அவர்கள் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றறை அளித்திருந்தார். அந்த பேட்டியில் பையா படத்தில் படம் குறித்து சில சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

-விளம்பரம்-
Paiyaa on Moviebuff.com

அந்த பேட்டியில் பேசிய லிங்குசாமி, பையா படத்தில் முதலில் நயன்தாரா தான் நடிப்பதாக இருந்தது என்றும் ஆனால், நயன்தாரா கேட்ட சம்பளத்தை குறைத்து கொள்ளும்படி கூறியதால் நயன்தாரா இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது என்றும் கூறியுள்ளார். அதன் பின்னர் தமன்னா பற்றி பேசிய லிங்குசாமி, முதல்ல படத்தோட ஹீரோயினா நயன்தாராவை கமிட் பண்ணுனோம். ஆனா, சில காரணங்களால பண்ண முடியல. இந்த வருத்தம் இதுவரைக்கும் ரெண்டு பேருக்கும் இருக்கு.

இதையும் பாருங்க : 2013 – செய்தி வாசிப்பாளராக சேர்வதற்கு முன் முதல் நாள் – பிரியா பவானி சங்கர் பகிர்ந்த பதிவு.

தமன்னாவும் ரொம்ப அழகாக நடிச்சிருந்தாங்க. பைபாஸ் ரோட்டுலதான் படத்தோட ஷூட்டிங் பெரும்பாலும் இருந்தது. அந்த நேரங்கள்ல என்கிட்ட கேரவன் இல்லாம இருந்திருக்கு. அப்பலாம் ட்ரெஸ் மாத்துறதுக்கு ரெண்டு பொண்ணுங்க புடவை புடிச்சிட்டு நிப்பாங்க. தமன்னா சிரமம் பார்க்காம அதுக்குள்ள போயிட்டு வந்து மாத்தியெல்லாம் கொடுத்திருக்காங்க. ஒரு கம்ஃபோர்ட் ஜோன்லதான் எங்ககூட வேலை பார்த்தாங்க என்று கூறியுள்ளார் லிங்குசாமி

 

Advertisement