பாக்கியராஜால் வாழ்க்கையே முடித்துக்கொள்ள முயற்சி செய்த லிவிங்ஸ்டன் – அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்.

0
1658
- Advertisement -

பாக்கியராஜால் நான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன் என்று நடிகர் லிவிங்ஸ்டன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் லிவிங்ஸ்டன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றினார். ஆரம்பத்தில் திரைப்படங்களுக்காக இவருடைய பெயரை ராஜன் என்று பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

பின் 1988 இல் வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த சுந்தர புருஷன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து சுந்தர புருஷன்- 2 படத்துக்கான திரைக்கதையை தமிழ் சினிமாவில் ரிலீஸ் பண்ணுவதற்கு லிவிங்ஸ்டன் தயாராக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கடைசியாக இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்தா படத்தில் நடித்திருந்தார். தற்போதும் இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும், இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

அதில் மூத்த மகள் ஜோவிடா. இவர் தற்போது சினிமாவில் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இருந்தாலும், இவர் சீரியல்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி கடந்த ஆண்டு முடிவடைந்த பூவே உனக்காக என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு தற்போது இவர் அருவி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் லிவிங்ஸ்டன் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அதில் அவர் கூறியிருந்தது, நான் ஏழு நாட்கள் படத்தின் போது பாக்யராஜ் இடம் உதவி இயக்குனராக சேர பல வருடங்கள் கஷ்டப்பட்டு இருந்தேன். எதற்காக உதவி இயக்குனராக சேர வேண்டும் என்று என்னைக் கேட்டு அழைக்கும் வரை பொறுமையாக காத்திருங்கள் என்றார். நானும் மூன்று வருடங்கள் காத்திருந்தேன். பின்ன அவர் வீட்டு வாசலில் எல்லாம் காத்திருந்தேன். அவர் எங்கு சென்றாலும் சென்றேன். ஒரு சமயம் அவர் அப்பாவுடன் பிரச்சனை ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

அப்போதும் நான் பாக்யராஜிடம் மீண்டும் சென்றேன். அவர் வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால் நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைத்தேன். இதைக்கூட நான் பாக்கியராஜ் இடம் சொன்னேன். தற்கொலை எண்ணம் பற்றி அவரிடம் சொல்லி அழுந்தேன். உடனே அவர் பயந்து என்னை அழுகையை நிறுத்த சொன்னார். இதற்காக தான் நான் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்று கூறி உடனடியாக என்னை உதவி இயக்குனராக ஆக்கினார் என்று கூறினார்.

Advertisement