குடும்பத்துடன் சென்று புது கார் வாங்கிய அமுதவாணன் – பிக் பாஸ் பொட்டியை இப்போ தான் திறந்தார் போல.

0
644
Amudhavanan
- Advertisement -

பிக் பாஸ் பிரபலம் அமுதவாணன் தன் குடும்பத்துடன் சென்று புது கார் வாங்கி இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. சின்னத்திரையின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்து இருப்பவர் அமுதவாணன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். இவர் பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

-விளம்பரம்-

அதிலும் குறிப்பாக, இவர் நடிகர் ராமராஜன் போல் மேனரிசம் பண்ணுவது வேற லெவலில் இருக்கும். அதோடு இவர் சிறந்த நடனம் ஆடுபவர், மிக்கிரி கலைஞர், நடிகர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் சில படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும், இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்காத நிகழ்ச்சியே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு விஜய் டிவியில் ஒரு அங்கமாகவே அமுதவாணன் இருக்கிறார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமுதவாணன்:

இதன் மூலம் இவருக்கு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமுதவாணன் போட்டியாளராக பங்கேற்றுகிறார். ஆரம்பத்தில் இருந்தே அமுதவாணன் நிகழ்ச்சியில் நன்றாக விளையாடிக் கொண்டு வந்தார். பின் இவர் ஜனனி உடன் கூட்டணி வைத்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், அமுதவாணன் அதிகம் ஜனனியுடன் தான் பேசிக் கொண்டும், ஜனனியை கைப்பாவையாக மாற்றிக்கொண்டு இருக்கிறார் என்றெல்லாம் பலரும் கூறி இருந்தார்கள்.

அமுதவாணன் குறித்த சர்ச்சை:

இது குறித்து பலருமே அமுதவாணனை விமர்சித்து இருந்தார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அமுதவாணனுக்கு வெள்ளி திரையில் வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அமுதமாணன் புது கார் வாங்கி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சில ஆண்டுகளாகவே விஜய் டிவி பிரபலங்கள் பலரும் புது கார்களை வாங்கி அதனுடன் எடுத்து புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

விஜய் டிவி பிரபலங்கள்:

அந்த வகையில் சரண்யா, கேப்ரில்லா, மைனா நந்தினி, ரவீனா போன்ற பல விஜய் டிவி பிரபலங்கள் புது கார்களை வாங்கி சோசியல் மீடியாவில் பகிர்ந்தார்கள். சமீபத்தில் கூட தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடிகை ரக்சிதாவும் புது கார் ஒன்று வாங்கி அதனுடன் எடுத்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்தார். அந்த வரிசையில் தற்போது அமுத வாணனும் இணைந்திருக்கிறார்.

அமுதவாணன் வாங்கிய புது கார்:

தற்போது அமுதவாணன் தன் குடும்பத்துடன் சென்று maruthi suzuki Fronx என்ற காரை வாங்கி இருக்கிறார். இதான் ex showroom ஆரம்ப விலையை 8 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. அமுதவாணன் புது கார் வாங்கும் போது எடுத்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் அமுதவானனுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமுதவாணன் final வரை வந்தார். ஆனால், இறுதியில் 11.75,000 ரூபாய் பணப்பெட்டியோடு வெளிறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement