இது தான் இந்த வார நாமினேஷன் லிஸ்ட்.! கவின் யார பண்ணி இருக்கார் பாருங்க.!

0
7107
kavin
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது நான்காவது எலிமினேஷன் வாரத்தை நெருங்கியுள்ளது. இதுவரை பாத்திமா,வனிதா ஆகியோர் வெளியேறிய நிலையில் நேற்று (ஜூலை 21) மோகன் வைத்யா மூன்றாவது போட்டியாளராக வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் ப்ராசஸ் நடைபெற்றது.

-விளம்பரம்-

இந்த வாரம் யார்? யாரை நமிமேட் செய்தார்கள்

- Advertisement -
 • சாக்க்ஷி – மீரா மற்றும் சேரன்
 • சாண்டி – அபிராமி மற்றும் சாக்க்ஷி
 • கவின் – சாக்க்ஷி மற்றும் அபிராமி
 • தர்ஷன் – கவின் மற்றும் சாக்க்ஷி
 • ஷெரின் – மீரா மற்றும் சரவணன்
 • அபிராமி – கவின் மற்றும் மீரா
 • சரவணன் – அபிராமி மற்றும் சேரன்
 • சேரன் – கவின் மற்றும் சாக்க்ஷி
 • மதுமிதா – கவின் மற்றும் சாக்க்ஷி
 • முகேன் – மதுமிதா மற்றும் சரவணன்
 • மீரா – சாக்க்ஷி மற்றும் அபிராமி
 • லாஸ்லியா – சாக்க்ஷி மற்றும் மீரா
 • ரேஷ்மா – கவின் மற்றும் சேரன்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இது நாள் வரை சாக்க்ஷியை பிடிக்கும் என்று கூறி பல ரொமான்ஸ்களை அரங்கேற்றி வந்த கவின் சாக்க்ஷியை இந்த வாரம் நாமினேட் செய்துள்ளார். அதற்கு முக்கிய காரணமாக அவர் சொன்னது சாக்க்ஷி, மீரா மீட்டிங் போடதாக சொல்லி பொய் கூறியதால் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் பாருங்க : பொது இடத்தில் மேக்கப் இல்லாமல் சிக்கிய காஜல் அகர்வால்.! வைரலாகும் புகைப்படம்.!

கவின் மற்றும் ஒரு போட்டியாளராக அபிராமியை நாமினேட் செய்திருந்தார் . அதே போல சொல்லி வைத்தது போல சாண்டியும் அபிராமி மற்றும் சாக்க்ஷி ஆகியோரை நாமினேட் செய்துள்ளார். எனவே, இந்த வாரம் சாக்க்ஷி வெளியேறுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த வார நாமினேஷன் ப்ராசஸ்ஸை அடுத்து சேரன், மீரா, சரவணன், அபிராமி, கவின், சாக்க்ஷி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதில் சாக்க்ஷியை 7 பேரும், கவினை 5 பேரும், மீராவை 4 பேரும், சேரனை 3 பேரும், சரவணனை 2 பேரும் நாமினேட் செய்துள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement