தென்னிந்திய சினிமா திரை உலகின் அடுத்த சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய். தளபதி விஜய் அவர்களின் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்த “யூத்” படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்தது. மேலும், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ‘சந்தியா’ என்ற கதாபாத்திரத்தில் சாஹீன் கான் என்பவர் நடித்து இருந்தார். இந்த படத்தை வின்சென்ட் செல்வா இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்திற்கு மணி சர்மா இசையமைத்து இருந்தார்.
இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மாபெரும் ஹிட் அடித்தது. அதிலும் இந்த படத்தில் இடம்பெற்ற ‘சர்க்கரை நிலவே’ பாடல் 90ஸ் கிட்ஸ்களின் லவ் பெய்லியார் சாங்காக இருந்தாலும், இதே படத்தில் இடம்பெற்ற ‘ஆல்தோட்ட பூபதி’ பாடல் பள்ளி ஆண்டுவிழா பாடலாக பல 90ஸ்களுக்கு அமைந்தது. இந்த பாடலில் விஜய்யுடன் சேர்ந்து சிம்ரன் செம ஆட்டம் போட்டு இருப்பார்.
இதையும் பாருங்க : லோகேஷ், ஹிப் ஹாப் தமிழா என்று பலரையும் கலாய்க்கும் ரசிகர்கள் – ட்ரெண்டிங் ஆன கோயம்பத்தூர் ஹேஷ் டேக்.
சொல்லப்போனால் இந்த பாடலுக்கு பின்னர் விஜய் போல கருப்பு பேண்ட் மஞ்சள் சட்டை போட்டு பல ஹீரோக்கள் குத்து பாடலை தனது படங்களில் வைத்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த பாடலுக்கு சிம்ரனுக்கு முன் தனக்கு தான் வாய்ப்பு வந்தது என்று பிரபல நடன இயக்குனரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவர் பேசியதாவது,
வீடியோவில் 6 : 55 நிமிடத்தில் பார்க்கவும்
யூத் படத்தில் ஆல் தோட்ட பூபதி பாடலுக்கு நான் தான் டான்ஸ் ஆட வேண்டியது, ஆனால் அப்போது வேறு ஒரு ஷூட்டிங் இருந்ததால் அந்த பாடலை மிஸ் செய்துவிட்டேன் என்று கூறி உள்ளார். அதே போல காயத்ரி 16வயது இருக்கும் போதே ‘சார்லி சாப்ளின்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானாராம். அதன் பின்னர் இவருக்கு புதுப்பேட்டை படத்தில் ஸ்னேகா கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாம். அதற்கு டெஸ்ட் ஷூட் எல்லாம் கூட எடுத்த நிலையில் பின்னர் அந்த படம் 6 மாதம் கழித்து தான் எடுக்கப்படும் என்று செல்வராகவன் சொன்னதால் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டாராம் காயத்ரி.