தர்ஷன் வெளியேற்றம் குறித்து ட்வீட் செய்த காயத்ரி.! இவர்கள் இருவரில் யாராவது தான் வின்னராம்.!

0
13120
Gayathri
- Advertisement -

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக இறுதி கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி.மேலும்,டைட்டில் வின்னர் யார் ?என்று பல எதிர்பார்ப்புகளுடன் மக்கள் ஆவலாக உள்ளார்கள்.அதிலும் , நேற்று நடந்த எலிமினேஷனில் தர்சன் அவர்கள் வெளியேற்றப்பட்டார்.மேலும், கமல்ஹாசன் அவர்கள் நிகழ்ச்சி தொடக்கத்தில் எதிர்பார்க்காத விஷயமும் நடக்கலாம் என்று அவர் கூறியது போலவே நடந்தது என்று ரசிகர்கள் கூறினார்கள். முடிவாக கமல்ஹாசன் அவர்கள் இது மக்கள் ஓட்டின் மூலம் வந்த முடிவு என்று சொல்லிவிட்டார்.

-விளம்பரம்-

ஆனால், என்ன? நடந்தது என்று ஒன்றும் புரியாத அளவிற்கு மக்கள் உள்ளனர்.பிக்பாஸ் வீட்டை விட்டு கவின் வெளியே சென்றதைத் தொடர்ந்து 5 போட்டியாளர்கள் மட்டும் இருந்தார்கள். மேலும், கவின் சென்றுவிட்டார் யாரும் வெளியே போக மாட்டார்கள் என்று பலரும் நம்பிக்கையில் இருந்தார்கள். ஆனால்,கமல்ஹாசன் அவர்கள் எவிக்ஷன் இல்லை என்று நினைப்பது தவறு என்று கூறினார்.இந்நிலையில் தர்ஷன் தான் இறுதி கட்ட போட்டியாளராக சென்று டைட்டில் வின்னர் ஆக கூடிய வாய்ப்புள்ளது என்று ஆரம்பத்திலிருந்தே மக்களாலும், பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் அனைவரும் பேசப்பட்டு வந்த விஷயம்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் டைட்டிலை வெல்லப்போவது யார்.! முதல் நாளில் இவருக்கு தான் ஓட்டு அதிகம்.!

- Advertisement -

ஆனால், திடீரென்று தர்சன் எலிமினேட் செய்தது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இதனைத்தொடர்ந்து , வாக்குகள் அடிப்படையில் தான் தர்ஷன் வெளியேற்றப்படுகிறார் என்று அவர் கூறினார்.மேலும்,தர்சன் வெளியிடப்பட்டதை தொடர்ந்து எப்படி? அவருக்கு வாக்குகள் குறைந்தது என பல கேள்விகள் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் எழுப்பினர்.இது குறித்து தமிழ் பிக் பாஸ் சீசன் 2ன் போட்டியாளர் காயத்ரி ரகுராம் அவர்கள் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் .மக்கள் வாக்குகள் எப்பவுமே பின்தங்கிய அதாவது கடைசி நிலையில் உள்ள போட்டியாளர்களுக்கு மட்டும்தான் போடுவார்கள்.

ஆனால், தர்ஷன் ஒரு ரொம்ப ஸ்ட்ராங் போட்டியாளர்.அதுமட்டும் இல்லாமல் பிக் பாஸ் வீட்டிலேயே சிறந்த போட்டியாளர் என்று கூட சொல்லலாம் .மேலும், மக்கள் எப்படியும் தர்சன் வெளியே போக மாட்டார் என்ற நம்பிக்கையில் அவருக்கு ஓட்டு போட மறந்து இருப்பார்கள். அதனால் தான் அவர் தற்போது வெளியே செல்வதற்கு காரணம் என்று அவர் கூறியிருந்தார். இனி மேலாவது சரியான வெற்றியாளருக்கு ஓட்டு போட்டு தேர்ந்து எடுக்கலாம். என்னுடைய தேர்வு சாண்டி அல்லது முகென் தான் என்று பதிவிட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.

-விளம்பரம்-
Advertisement