கொழுந்து விட்டு எரியும் ஹிஜாப் விவகாரம் – ஏ ஆர் ரஹ்மான் மகளை உதாரணம் காட்டி காயத்ரி ரகுராம் போட்ட பதிவு.

0
747
gayathri
- Advertisement -

கர்நாடகாவில் பெரும்பாலான கல்லூரிகளில் இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து சில இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்ற சம்பவம் இந்தியா முழுவதும் பேரதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது. இஸ்லாமிய மாணவ, மாணவிகள் குல்லா, பருதா, புர்கா அணிந்து கல்லூரிக்கு வர கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. இருந்தும் இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்திருக்கிறார்கள். இதனை அடுத்து வகுப்பறைக்கு செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து மாணவிகள் பல நாட்கள் போராட்டம் நடத்தினார்கள். பின் இது தொடர்பாக உயர் நீதி மன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தால் நாங்கள் காவி துண்டு அணிந்து வருவோம் என்று கூறி இந்துத்துவா மாணவர்கள் காவி துண்டு அணிந்து வந்தனர். சில மாணவிகள் காவி துப்பட்டா அணிந்து வந்தனர்.

-விளம்பரம்-

இதனால் கர்நாடக மாநிலம் முழுவதும் மத ரீதியாக பிரச்சனை நிலவியது. பின் மாணவ, மாணவிகள் பொதுவான சீருடையை அணிந்து வர வேண்டும் என்று மாநில அரசு அதிரடி உத்தரவிட்டது. இப்படி இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்த நிலையில் இதற்கு பதில் காவி அணிந்து வந்த மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கர்நாடகாவில் இருக்கும் சிவமொக்கா, உடுப்பி, மங்களூர், சிக் மங்களூர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பியு கல்லூரிகளில் இந்த மோதல் ஆர்ப்பாட்டமாக நிலவியிருக்கிறது.

- Advertisement -

மாணவர்களுக்கு இடையில் ஹிஜாப் பிரச்சனை :

இதனால் இந்துத்துவா மாணவர்களுக்கும், இஸ்லாமிய மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இந்துத்துவா மாணவர்கள் முழுவதும் கரகோஷம் செய்து போராட்டம் நடத்தி வந்தார்கள். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் இஸ்லாமிய மாணவிகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மாணவிகள் காயம் அடைந்த நிலையில் இந்துத்துவா 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். பின் உடனடியாக போலீஸ் வந்து லத்தி சார்ஜ் நடத்தி மாணவ, மாணவியரை அப்புறம் படுத்தி இருந்தார்கள்.

ஹிஜாப் விவகாரத்தில் காயத்ரி ரகுராம் :

இந்த விவகாரத்தில் பல்வேறு தரப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் பிஜேபி ஆதரவாளர்கள் பலர் பள்ளிகளில் சீருடை தான் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகையும் பா ஜ க கட்சியின் கலை, கலாச்சார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் இந்த விவகாரம் குறித்து கூறியுள்ளதாவது ‘ஹிஜாப் பள்ளி சீருடையாக இருந்தால், அனைத்து மாணவர்களும் அதை அணிய வேண்டும்.

-விளம்பரம்-

ஏ ஆர் ரஹ்மான் மகளை உதாரணம் :

நாங்கள் முஸ்லிம்கள் & ஹிஜாப்களுக்கு எதிரானவர்கள் அல்ல. பள்ளிக்குப் பிறகு அவற்றை அணியுங்கள். பள்ளி சீருடையை பின்பற்ற வேண்டும். சமீபத்தில் ஹிஜாப் அணிந்ததற்காக ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் ட்ரோல் செய்யப்பட்டபோது (பள்ளிக்கு வெளியே) நான் அவளை ஆதரித்தேன்.பள்ளிக்கு வெளியே கலாச்சாரத்தை பின்பற்றுவது தவறல்ல. ஆனால் பள்ளியில் நாம் சமம். நாம் யார் (பணக்காரன் அல்லது ஏழை) என்பதை நம் ஆடை வரையறுக்கக்கூடாது, அதனால்தான் நமக்கு சீருடைகள் உள்ளன.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏஹிஜாப் விவகாரத்தில் ரஹ்மான் மகள் பதிலடி :

கடந்த 2020 ஆம் ஆண்டு ஏ ஆர் ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று, 10 ஆண்டுகள் நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த விழா மேடையில் ஏ ஆர் ரஹ்மானின் மகள் கதிஜா, ஹிஜாப் அணிந்து பேசி இருந்ததை கண்டு பலரும் ஏ ஆர் ரஹ்மான் ஒரு பிற்போக்கு வாதி தன் மகளுக்கு ஆடை சுதந்திரம் கூட கொடுக்கமறுக்கிறார் என்றெல்லாம் விமர்சனம் எழுந்தது. ஆனால், கதிஜா, நான் என்ன ஆடை அணிய வேண்டும் என்பது என் சுதந்திரம், என் பெற்றோர்கள் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து இருக்கிறார்கள் என்று பதிலடி கொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement