விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீஸனின் பிக் சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். அந்த வகையில் நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராமும் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஜூலிக்கு பிறகு அதிகம் வெறுக்கப்பட்டவர் காயத்ரி ரகுராம் தான். சீசன் 1 நிகழ்ச்சியில் இவர், ஓவியவிடம் அடிக்கடி வம்பிழுந்து வந்ததால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர்.
இவர் பிரபல நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டர் என் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது இவர் தனது 14 வயதில் இருந்தே சினிமா துறையில் இருந்து வருகிறார் இருந்தே 2002 ஆம் ஆண்டு பிரபுதேவா மற்றும் பிரபு நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் ஸ்டைல் பரசுராம் விசில் விகடன் போன்ற பல்வேறு படங்களில் நடித்து வந்தார்.
அமெரிக்க மாப்பிளை :
வயதும் உடல் எடையும் கூடியதால் இவருக்கு சினிமாவில் நுழைந்த சிறிது காலத்திலேயே கதாநாயகி ஆகும் வாய்ப்பு கைநழுவி போனது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கைநழுவி போது இவர் அடிக்கடி நான் ஒருவரை உண்மையாக காதலித்தேன் ஆனால் அவர் என்னை ஏமாற்றி விட்டார் என்று கூறுவார். அது வேறு யாரும் இல்லை அவரது கணவர் தான்.2006 அமெரிக்க மென்பொருள் பொறியாளர் தீபக் சந்திரசேகர் என்ற வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டார்.
கணவர் செய்த கொடுமை :
இவர்களது திருமணம் ஹிந்து முறைப்படி நடந்தது மேலும் திருமணத்திற்கு பல்வேறு பிரபலங்களும் வந்திருந்தனர்.பின்னர் 2008 இல் காயத்ரி மற்றும் அவரது குடும்ப இல் காயத்ரியின் கணவர் மீது பெண் கொடுமை செய்வதாக கூறி நீதி மன்றத்தில் விவகரத்துக்கோறினர். இதையடுத்து இவர்களுக்கு சட்டப்படியான விவாகரத்து 2010 இல் அளிக்கப்பட்டது.விவாகரத்துக்கு பின்னர் வானம் வைராஜாவை இது என்ன மாயம் போன்ற பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்து இருந்தார்.
இறுதியாக தமிழில் கடந்த ஆண்டு வெளியான யாதுமாகி நின்றார் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் தொலைக்காட்சியில் நடுவராகவும் பங்கேற்று வந்தார் காயத்ரி ரகுராம். பல ஆண்டுகளாக bjpயில் காயத்ரி வரும் காயத்ரி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பிரபல செய்தி ஊடகத்திற்கு பேட்டி ஓன்று அளித்திருந்தார். அதில் நிருபர் நீங்கள் எந்த விஷியத்தை முன்னிலை எடுத்து வைத்தாலும் உங்களிடம் முதலில் வரும் கேள்வி ஏன் விவாகரத்து செய்து கொண்டீர்கள் என்று தான்? எனவே அதற்கான காரணம் என்ன? என்று நிருபர் கேட்டிருந்தார்.
விவகாரத்திற்கான காரணம் :
இதற்கு பதிலளித்த காயத்ரி ரகுராம் நான் அப்போது சிறிய வயது என்னுடைய அப்பத்தான் எனக்கு திருமணம் செய்து வைத்தார். திருமணமானது 22 வயதிலேயே ஆகிவிட்டது பின்னர் குறுகிய காலத்திலேயே விவாகரத்து நடந்தது. அதில் அவரையும் குற்றம் சொல்ல முடியாது என்னையும் குற்றம் சொல்ல முடியாது. விவாகரத்திற்கு பிறகு அவர் அவருடைய சொந்த வாழ்க்கையை தேடி சென்றுவிட்டார் பின்னர் அதனை மீண்டும் மீண்டும் கேட்பதற்க்கு அர்த்தமே இல்லை என்று கூறினார். மேலும் தான் தன்னுடைய வாழ்க்கை அரசியலுக்காக முழுவதுமாக அர்ப்பணித்து விட்டதாகவும் கூறினார்.
தற்போது எனக்கு 40 வயதை எட்டவிருக்கிறது அப்போது இருந்ததை விட இப்போது கோவம் மிகவும் குறைத்திருக்கிறது. மேலும் துன்பங்களை எதிர்கொள்ளும் சக்தியை இந்த இடைவெளி கொடுத்திருக்கிறது. நான் எந்த கதவுகளையும் மூடவும் இல்லை திறக்கவும் இல்லை. என்னுடைய பாதையை முழுவதுமாக கடவுளிடம் அற்பணித்து விட்டேன் அவர் என்ன முடிவு செய்கிறாறோ அதனை நான் ஏற்றுக்கொள்வேன் என்றும் கடந்த 4 வருடங்களாக தன்னுடைய வாழ்க்கையை அரசியலில் முழுவதுமாக கொடுத்து விட்டதாக கூறினார்.