தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் காயத்ரி ரகுராம். இவர் பிரபல நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டரின் மகள் ஆவார். மேலும், காயத்ரி நடிகை மட்டும் இல்லாமல் நடன இயக்குனரும் ஆவார். இவர் சில படங்களில் நடித்தார். ஆனால், இவரால் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை. அதற்கு பின் தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தார். இருந்தாலும், இவருக்கு பெரியதாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
பின் இவர் அரசியலில் குதித்தார். அதன் பின் முன்னரே காயத்திரி BJP கட்சியில் இணைந்து தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வந்தார். இவர் BJP யில் இருந்தாலும் பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். இவர் தமிழ் நாட்டு மற்றும் அயல்நாட்டு தமிழ் வளர்ச்சி துறையில் தலைவராக இருந்தார். இவர் பாஜக கட்சியில் சேர்ந்ததில் இருந்து பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி இருந்தார். குறிப்பாக, காயத்ரி ரகுராம் ஒவ்வொரு முறை உயர் பதவி பெரும் போதும் இவரது பெயர் அடிப்பட்டு விமரிசிக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்தது.
காயத்ரி ரகுராம் குறித்த சர்ச்சை:
அதோடு கட்சியில் உள்ள மற்ற கட்சியினரின் உளவாளி என்பவர்களில் இவரது பெயர் பலமுறை அடிபட்டு வந்தது. இதனால் இவரை பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அதோடு மாநில தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர்களுக்கும், காயத்திரி ரகுராமுக்கும் இடையே சில பிரச்சனைகள் இருந்தது. இது சமூக வலைத்தளங்களில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனால் கோபம் அடைந்த காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து விலகினார். இருந்தும் அண்ணாமலை குறித்து விமர்சித்து இருந்தார்.
காயத்ரி ரகுராம் மொட்டை புகைப்படம்:
இந்த நிலையில் காயத்ரி ரகுராம் அவர்கள் சமீபத்தில் திருப்பதி சென்று மொட்டை அடித்திருக்கிறார். பின் மொட்டை அடித்துக் கொண்டு நெற்றியில் நாமத்துடன் இருக்கும் புகைப்படத்தை இவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்து பலருமே விமர்சித்து இருந்தார்கள். இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காயத்ரி ரகுராம் பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் அவர், என்னுடைய பாட்டிக்கு நீளமாக முடி இருக்கும்.
மொட்டை அடித்த காரணம்:
அதே போல எனக்கும் நீளமாக முடி வைப்பது ரொம்ப பிடிக்கும். அதனால் தான் நானும் நீளமாக முடி வைத்திருந்தேன். ஆனால், அதை பராமரிப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் நான் வேண்டுதல் வைத்திருந்தேன். நான் 40 வயதில் மொட்டை அடிக்கிறேன் என்று வேண்டி இருந்தேன். அதனால்தான் மொட்டை அடித்தேன். இன்னொரு காரணம் இருக்கிறது. சமீபகாலமாகவே மக்கள் அழகு சாதன பொருட்களில் அதிகமாக பணத்தை செலவழிக்கிறார்கள். இதில் ஜிஎஸ்டி வேற லெவலில் இருக்கிறது.
விமர்சனம் குறித்த பதிலடி:
நடுத்தர பெண்களும் அழகு சாதனப் பொருட்கள் தான் நம்மை அழகாக காட்டும் என்று நினைக்கிறார்கள். இதுவும் ஒரு அழகுதான். இனி அழகு சாதன பொருட்களுக்கு செலவிடும் பணத்தை மிச்சப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டேன். அதுமட்டுமில்லாமல் நான் மொட்டை போட்ட புகைப்படத்தை பதிவிட்ட உடன் என்னை பலருமே கிழவி, மொட்டை பாட்டி, மொட்டை பாப்பாத்தி என்றெல்லாம் கிண்டல் செய்திருந்தார்கள். ஆனால், நான் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. நான் இதில் தன்னம்பிக்கையாக உணர்கிறேன் என்பது தான் முக்கியம் என்று கூறி இருந்தார்.