PSBB விவாகரத்தில் குரல் கொடுத்த விஷாலை அசிங்கப்படுத்திய காயத்ரியை கேள்வி கேட்ட நடிகர். காயத்ரி சொன்ன சப்பக்கட்டு.

0
59909
gayathri
- Advertisement -

சென்னை கேகே நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் முதுநிலை மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மாணவிகளுகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் ராஜகோபாலன் மீது புகாரளித்துள்ளனர். புகாரின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ள ராஜகோபாலன் மீது 5 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது. பல்வேறு மாணவிகள் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் குறித்துப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.

-விளம்பரம்-
Image

இந்த விவகாரத்தில் பலர் பள்ளிக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பி ஜே பி ஆதரவாளர்கள் தான் பள்ளிக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வருகின்றனர். தற்போது இந்த விவகாரம் குறித்து திரையுலக பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் விஷால் தனது கருத்தை தெரிவித்த விஷால், பிஎஸ்பிபி பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் செய்த பாலியல் தொல்லை என்னைக் குறுகச் செய்கிறது. அந்தப் பள்ளி மூடப்பட வேண்டும் என்பதை உணர வைத்தது.

இதையும் பாருங்க : காதலரை திடீர் திருமணம் செய்த சகுனி, 24 பட நடிகை ப்ரணிதா – 3 நாட்கள் கழித்து வெளியான புகைப்படம்.

- Advertisement -

பாதிக்கப்பட்ட மாணவர்களிடமும் பெற்றோர்களிடம் ஒருவரும், ஒருமுறை கூட மன்னிப்பு கோரவில்லை. இதுபோன்ற குற்றங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என் நண்பர், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொ இதை ஒரு சாதிப் பிரச்சினையாக மக்கள் மாற்றுவது வெட்கக்கேடானது. மாணவிகளுக்குத் தொல்லை கொடுத்த நபர் தூக்கிலிடப்பட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றங்களுக்கு உடனடி தண்டனை கிடைக்கும் என்று பதிவிட்டு இருந்தார்.

விஷாலின் இந்த பதிவிற்கு கமன்ட் செய்த காயத்ரி ரகுராம், நான் சினிமா துறையில் பாலியல் வேட்டையாடுபவர்களையும் துன்புறுத்தல்களையும் முதலில் கண்டிப்பது விஷால். புதியதாக சினிமாவில் நுழையும் பெண்களுக்கும் முன்னணி நடிகைகளுக்கும் பாலியல் துன்புறுத்தலை கொடுத்திருக்கிறார். நீங்களும் உங்கள் நண்பர்களும் பலரை பயன் படுத்தி தூக்கி வீசி விட்டீர்கள். உங்களால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு உதவி தேவைப்படும்போது நீங்கள் உங்கள் ஹீரோயிசத்தை காட்டியிருக்க வேண்டும்,

-விளம்பரம்-

ஆனால் அதற்கு பதிலாக வேறு வழியை கையாண்டு இருக்கிறீர்கள். உங்களின் தொடர்ச்சியான அணுகுமுறையால் பல பெண்கள் உங்களிடமிருந்து ஓடுகின்றன என்று பதிவிட்டு விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார் இப்படி ஒரு நிலையில் நடிகரும் விஷாலின் நண்பருமான நந்தா, காயத்ரி ரகுராமிற்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில், எந்த நடிகை ஓடினார்கள் ? உங்களால் நிரூபிக்க முடியுமா ? பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக குரல் கொடுங்கள். அதுதான் சிறந்தது இப்படி அரசியலுக்காக முட்டாள்தனமான கருத்தைக் கூறாதீர்கள் என்று கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவிக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் ஆதரவாக குரல் கொடுப்பதை விட்டு விட்டு மாணவர்களுக்கு ஆதரவாக பேசிய விஷாலை விமர்சிக்காதீர்கள். விஷால் எந்த நடிகையையாவது பாலியல் தொல்லை செய்தார் என்பதற்கான ஆதாரம் இருக்கிறதா ? அவருக்கு எதிராக புகார் இருக்கிறதா? என்று சரமாரி கேள்வியை கேட்டுள்ளார் நடிகர் நந்தா. இதற்கு பதில் அளித்த காயத்ரி முடிந்தது முடிந்ததுதான். அதிலிருந்து மீண்ட அவர்களின் எதிர்காலத்தை நான் கெடுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

Advertisement