பாலாவின் புள்ளிகளை பூஜியம் ஆக்கிய போட்டியாளர் கடுப்பில் பாலா.

0
904
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 11 வாரத்தை கடந்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சம்யுக்தா, சனம் ஷெட்டி, நிஷா, சுசித்ரா, ஜித்தன் ரமேஷ் ஆகிய 8 பேர் வெளியேறிய நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை அர்ச்சனா வெளியேறி இருந்தார். கடந்த வார நாமினேஷனில் ஆரி, ஆஜீத், அனிதா, அர்ச்சனா, ரியோ, ஷிவானி,சோம் சேகர் ஆகியோர் இடம்பெற்றனர் . எனவே, இந்த வாரமும் லவ் பேட்டில் இருந்து யாராவது வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் அர்ச்சனா தான் வெளியேறுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

-விளம்பரம்-

அதே போல பல்வேறு தனியார் வலைத்தளங்களில் நடத்தப்பட்டு வந்த ஓட்டிங்கில் அர்ச்சனாவிற்கு தான் குறைவான வாக்குகள் பதிவானது.இதில் எதிர்பார்த்தது போலவே அர்ச்சனா தான் வெளியேற்றப்பட்டார். சம்யுக்தவிற்கு பின்னர் அர்ச்சனாவின் வெளியேற்றம் தான் ரசிகர்களுக்கு கொஞ்சம் திருப்தியான வெளியேற்றமான அமைந்து இருந்தது. இது ஒருபுறம் இருக்க கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்கின் அடிப்படையில் டாஸ்க் மற்றும் வாரம் முழுதும் சிறப்பாக செயல்பட்ட போட்டியாளர்களை தேர்ந்தெடுத்தனர். இதில் அர்ச்சனா, ரம்யா, பாலாஜி ஆகிய மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அர்ச்சனா வெற்றி பெற்று அடுத்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- Advertisement -

அர்ச்சனா வெளியேறியதால் தன்னுடைய கேப்டன் பதவியை பாலாஜிக்கு கொடுத்துவிட்டு சென்றார் அர்ச்சனா. இதனால் முதல் முறையாக வீட்டின் தலைவரானதோடு மட்டுமல்லாமல் இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்தார் பாலாஜி. இப்படி ஒரு நிலையில் ‘Ball Catch’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. நேற்றய நிகழ்ச்சியில் கூட இதே டாஸ்க் நள்ளிரவு வரை தொடர்ந்தது.

தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் இதே பால் டாஸ்க் தொடர்ந்திருக்கிறது இம்முறை போட்டியாளர்களுக்கு தங்க பால் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை யார் சரியாக பிடிக்கிறார்களோ அவர்கள் தேர்ந்தெடுக்கும் அட்டையில் என்ன எழுதி இருக்கிறது அதை செய்ய வேண்டும். இதில் ரம்யா பாண்டியன் ரியோவின் புள்ளிகளை பூஜ்ஜியம் ஆக்கி இருக்கிறார் அதேபோல கேப்ரில்லா பாலாஜியின் புள்ளிகளை பூஜ்ஜியம் ஆகி இருக்கிறார்

-விளம்பரம்-
Advertisement