ஓடவும் முடியாது, ஒலியவும் முடியாது..! நிரூபித்து காட்டிய ஆர்த்தி.! அப்படி என்ன செய்தார்

0
214
Aarthi
Aarthi

நகைச்சுவை நடிகை ஆர்த்தி கணேஷ்கரை நாம் அனைவரும் அறிவோம். பல படங்களில் வடிவேலு, விவேக் போன்ற காமெடி நடிகர்களுடன் நடித்துள்ளார். இடையில் பட வாய்ப்புகள் குறைந்தாலும், கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீ- என்ட்ரி கொடுத்திருந்தார் ஆர்த்தி.

ஆர்த்தி என்றதும் நம் நினைவில் முதலில் வருவது இவரது குண்டான தோற்றம் தான். ஆரம்பத்தில் ஆர்த்தி சற்று அளவான உடலில் தான் இருந்தார். ஆனால், உடல் எடையை கூறைக்கின்றேன் என்று இவர் எடுத்த சில முயற்சிகளால் இவரது உடல் எடை மேலும் அதிகரித்துவிட்டது.

இருப்பினும் தனது உடல் எடையை பற்றி கவலைபடாமல் தனது உடல் எடையை யாரேனும் கிண்டல் செய்தாலும் அதனை ஆர்த்தி பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. இந்நிலையில் நடிகை ஆர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அந்த புகைப்படத்தில் ஒரு காரின் டிக்கியில் நுழைய முயற்சி செய்து கொண்டிருக்குமாறு இருக்கும் ஆர்த்தி ‘ஓடவும் முடியல, ஒலியாவும் முடியல’ என்று தனது குண்டான உருவத்தை தானே கிண்டல் செய்துள்ளார். இதனை புகைப்படத்தில் ஆர்த்தியின் குறும்புதனத்தை கண்ட சில ரசிகர்களும் கேளிக்கையாக ரீ-ட்வீட் செய்துள்ளனர்.