இசைவாணி சர்வாதிகாரம்னா அப்போ ஐஸ்வர்யா உள்ள இருந்திருந்தா – வைரல் மீமிற்கு ஐஸ்வர்யா கொடுத்த பதிலை பாருங்க.

0
1093
isaivani
- Advertisement -

இசைவாணியை சர்வாதிகாரி என்றால் ஐஸ்வர்யா தத்தாவை என்ன சொல்வது என்று ரசிகர்கள் மீம்ஸ் போட்டு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறார்கள். அனைவரும் எதிர்பார்த்திருந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த 3 ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மூன்று வாரங்களை கடந்து உள்ளது. கடந்த சீசன்களை விட இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல புதிய மாற்றங்களையும், வித்தியாசமான கான்செப்ட்டையும் புகுத்தி இருக்கிறார்கள். கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் பஞ்சபூதம் கான்செப்ட் வைக்கப்பட்டது. அதில் யார் நாணயம் வைத்திருக்கிறார்களோ அவர்கள் தலைவராக இருந்து அவர்கள் சொல்லும் வேலையை செய்ய வேண்டும் என்று பிக்பாஸ் அறிவித்திருந்தது.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து இந்த வாரம் நெருப்பு சக்திக்கான அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. நெருப்பு சக்தியை இசைவாணி வைத்திருப்பதால் இந்த வாரம் முழுவதும் பிக் பாஸ் வீட்டில் எல்லா பொறுப்புகளையும் இசைவாணி தலைமை தாங்கி ஏற்று நடக்க வேண்டும் என்று பிக்பாஸ் அறிவித்து இருந்தது. அதேபோல் இந்த வாரம் மதுமிதா தலைவராக உள்ளார். ஆரம்பத்தில் நெருப்பு சக்தி கிச்சன் ஏரியா பகுதியில் மட்டும் என்று சொல்லப்பட்டது. ஆனால், இப்ப வீட்டு முழுமையாக கட்டுப்பாடு செய்யலாம் என்று இசைக்கு அறிவித்திருந்தது.

- Advertisement -

இதனையடுத்து மதுவுக்கும், இசைக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்றைய எபிசோடில் இசை தனக்கு கொடுத்த அதிகாரத்தை சர்வாதிகாரமாக மாற்றுகிறார் என்று அண்ணாச்சி சொன்னவுடன் வீட்டில் உள்ள பிற போட்டியாளர்களும் இசை உடன் சண்டை போடுகிறார்கள். பின் இசைக்கும், அண்ணாச்சிக்கும் இடையே பிரச்சனை கிளப்புகிறது. தற்போது இதை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் இசைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இசை பொறுமையாகவும், சிரித்த முகத்தோடும் தன் வேலைகளை சொல்லிக் கொண்டு தன்னுடைய குழுவை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இசையை சர்வாதிகாரம் என்று சொல்வது நியாயம் இல்லை.

இவ்வளவு மென்மையாக நடத்திய இசைவாணியையே அதிகாரம் என்கிறார்களே இதே பிக்பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தாஎன்ன சொல்வது என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். இதேபோல் கடந்த சீசனில் ராணி என்ற அதிகாரத்தை ஐஸ்வர்யாவிடம் கொடுத்திருந்தார்கள். அப்போது அவர் பிற போட்டியாளர்களை பயங்கரமாக டார்ச்சர் செய்வைத்து, போட்டியாளர்கள் மீது குப்பை கொட்டுவது என்று பயங்கரமாக ஹிட்லர் ஆட்சி போல் நடத்தி இருந்தார். ஆனால், இசைவாணி இந்த மாதிரியெல்லாம் எதுவும் செய்யாமல் இருப்பதை அனைவரும் சர்வாதிகாரி என்று கூறுவது குறித்து ரசிகர்கள் கொந்தளித்து சோஷியல் மீடியாவில் மீம்ஸ்களை உருவாக்கிக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது இந்த சீசனில் ஐஸ்வர்யாவிடம் நெருப்பு சக்தி கிடைத்திருந்தால் வீடே பற்றிக் கொண்டிருக்கிறோம் என்று மீம்ஸை உருவாக்கி உள்ளார்கள். அதை தற்போது ஐஸ்வர்யா தன்னுடைய இன்ஸ்டாவில் வைத்து உள்ளார். இந்த மீம்ஸை ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement