பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் நான்கு வாரமே இருக்கிறது. இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என்பதற்கான சுவாரசியம் கூடி வருகிறது.கடந்த வார நிகழ்ச்சியில் சேரன் வெளியேறி இருந்தது ரசிகர்கள் பலருக்கும் மிகப்பெரிய ஷாக்காக அமைந்தது. இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் நல்ல அனுபவத்தை கொண்டு செல்வதாக சேரன் கூறியிருந்தார்.
இன்னும் 6 போட்டியாளர்கள் மட்டும் மீதமுள்ள நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டு பினாலே டாஸ்கில் முகென் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளார். இறுதி வாரம் என்பதால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள முகெனை தவிர மீதம் இருக்கும் 5 போட்டியாளர்கள் அனைவரும் இந்த வார எலிமினேஷனுக்கு நேரடியாக நாமினேட் ஆகியுள்ளனர்.
இதையும் பாருங்க : உன் அம்மா இதற்கு சந்தோசபடுவாங்களா.! பிக் பாஸ் போட்டியாளரின் கணவரை வறுத்தெடுத்த வனிதா.!
நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மஹத் மற்றும் யாஷிகா சிறப்பு விருந்தினர்களாக சென்றிருந்தனர். மேலும் , இவர்கள் உள்ளே சென்று போட்டியாளர்களுக்கு ஒரு சில டாஸ்குகளையும் கொடுத்திருந்தனர். அந்த வகையில் ஷெரின் தங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களுக்கு கடிதத்தை எழுதலாம் என்றும் அந்த கடிதம் ஒளிபரப்ப படாது என்றும் அவர்கள் அறிவித்தனர்.
அப்போது ஷெரின் கடிதத்தை எழுதிய பின்னர் அதனை படித்து காண்பிக்க வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்தால் அந்த கடிதத்தை கிழித்து போட்டார் ஷெரின். தற்போது வெளியாகியுள்ளார் இரண்டாவது ப்ரோமோவில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர்களான ஜனனி மற்றும் ரித்விகா உள்ளே சென்றுள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.