வெளியேறிய வனிதா கைதட்டி ராஜா மாதா போல லுக்குவிட்டு மாஸ் காட்டியுள்ள ரம்யா கிருஷ்ணன். வெளியான வீடியோ இதோ.

0
75299
vanitha
- Advertisement -

பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமானார்.வனிதாவிற்கு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி பின்னர் அந்த இரண்டு திருமணம் விவாகரத்தில் முடிந்தது அனைவரும் அறிந்த விஷயம் தான். அதன் பின்னர் இவர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் உடன் காதலில் இருந்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் பிரிந்துவிட்டார்கள். திருமணத்திற்கு பின் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சினிமாவில் இருந்து விலகினார். இவருக்கு ரீ- என்ட்ரி கொடுத்தது விஜய் டிவி தான்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் பிரபலமடைந்த வனிதா பின்னர் விஜய் டிவியின் பல நிகழ்சகளில் பங்கேற்றார். அந்த வகையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்.இதில் இவருக்கு ஜோடியாக சுரேஷ் சக்ரவர்த்தி பங்கேற்று இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து விள்குவதாக அறிவித்து இருந்தார்.

- Advertisement -

அதில், ஒரு பெண் தான் இன்னோரு பெண்ணுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். ஆனால் , அவர்களை வயதில் மூத்தவர்கள் வென்று விடுவார்கள் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் கடந்து வந்த பாதையை மறந்து விட்டார்கள் என்று கூறி இருந்தார். வனிதா சீனியர் நடிகை என்று சொன்னது ரம்யா கிருஷ்ணனை தான் என்பது பலருக்கும் தெரியும்.

This image has an empty alt attribute; its file name is 1-13-724x1024.jpg

ஆனால், ரம்யா கிருஷ்ணனிடம் இது குறித்து கேட்கப்பட்ட போது நோ கமெண்ட்ஸ் என்று சொல்லிவிட்டார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் நகுல் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இருவரும் வனிதாவிற்கு மார்க் போட்ட பிறகு, உங்க ரெண்டு பேர்ட்டயும் சொல்றேன், மத்தவங்க கூட கம்பேர் பண்ணாதீங்க என்று நடுவர்களுக்கே அட்வைஸ் செய்தார். இதனால் கடுப்பான ரம்யா கிருஷ்ணன் லெப்ட் ரைட் வாங்க பின் செட்டை விட்டு வனிதா வெளியேரினார். அப்போது ரம்யா கிருஷ்ணன் கை தட்டிவிட்டு பாகுபலி ராஜமாதாவை போல படு கெத்தாக லுக் விட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement