இனி ஜூலியை யாரும் கலாய்க்க தேவையில்லை ! ஏன் தெரியுமா !

0
3196
julie

சென்ற வருடம் கிட்டத்தட்ட இதே சமயம் ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் வெகுவாக பாராட்டுகளை வாங்கி, பின்னர் பிக் பாஸ் என்ற ஒரு நிகழ்ச்சியின் மூலம் தான் தரத்தை தாழ்த்திக்கொண்டு பலரிடமும் எதிர்மறை விமர்சனங்களை பெற்றவர் ஜூலி. பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது கூட எதையாவது ஒன்றை பேசி தானே ஒரு சர்ச்சையில் மாட்டிக்கொள்வார்.
julieஇவர் தெரிந்து பேசுகிறாரா? இல்லை தெரியாமல் பேசுகிறாரா? என்று அவருக்கே தெரியாது போலும். அப்படித்தான் பிக் பாஸ் வீட்டின் உள்ளே இருந்த நாட்கள் முழுவதும் குப்பை கொட்டினார். யாருக்காவது நல்லவராக இருக்க வேண்டும், என யாரையோ ஏதாவது தப்பாக பேசி விடுவது, பின்னர் ஐயோ! நான் அப்படி பேசவே இல்லை, என வாய்க்கு வந்ததை சொல்லுவது. இப்படியாக பிக் பாஸ் வீட்டில் தன் காலத்தை கழித்தார்.

இதனால் பல கடுமையான விமர்சனங்களை பெற்ற ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் இதை எல்லாம் கண்டும் காணாதது போல் கலைஞர் டீவியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அந்த இடத்திலும் ஏதோ ஒன்று பேசி மக்களிடம் பல்ப் மேல் பல்ப் வாங்கி வருகிறார் ஜூலி.
bigg-boss-julieஅதேபோல் தற்போது ஒரு அப்பளம் கம்பெனி விளம்பரத்தில் நடித்துள்ள ஜூலி அதிலும் அவர்கள் சொல்லிக்கொடுத்த டயலாக்கை அப்படியே பேசி தன்னை தானே களாய்த்துக்கொண்டுள்ளார். அதாவது, பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது அந்த ‘ 5 செகண்ட் வீடியோ ‘ போட்டால் உண்மை தெரிந்துவிடும் என்று கூறி வந்தார். அதே டயலாக்கை இந்த அப்பளம் கம்பெனி விளம்பரத்திலும் ‘எனக்கே 5 செக்கண்டா’ எனக் கூறியுள்ளார். இதனால் இந்த ஜூலிக்கு வேறு வேலை இல்லையா, இப்படி தன்னை தானே கலாய்த்து கொள்கிறார் என நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.

- Advertisement -
Advertisement