தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க போராட்டமாக கருதப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீரத் தமிழச்சி என்று பெயர் எடுத்தவர் ஜூலி. ஆனால், விஜய் தொலைக்காட்சியில் நடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதற்கு பின்னர் இவரது நல்ல பெயர் அனைத்தும் அப்படியே ரிவர்ஸ் ஆகி விட்டது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் அரங்கேற்றிய பல நாடகத்தால் இவருக்கு பல ஹீட்டர்ஸ்கள் உருவாகிறார்கள். இவரைப் பற்றிய எந்த செய்திகள் வந்தாலும் இவரை சமூகவலைதளத்தில் வறுத்து எடுத்து வந்தனர் . ஆனால், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ரியாலிட்டி ஷோ, சினிமா என்று பிஸியாக இருந்து வருகிறார் ஜூலி. மேலும், இவருக்கு துபாயை சேர்ந்த மார்க் என்ற காதலரும் இருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு தமிழ் படத்திலும் நடிக்கப் போகிறார்கள்.
இதையும் பாருங்க : என்ன ஜூலி மார்கை கழட்டி விட்டுட்டாயா.! ஜூலியின் புதிய புகைப்படத்தை வறுத்தெடுத்த ட்விட்டர் வாசிகள்.!
சமீபத்தில் சென்னை எழும்பூரில் போலீசை தாக்கியதாக நடிகை ஜூலியின் காதலன் மீது புகார் போடப்பட்டுள்ளது. பூபதி எண்டவரின் போலீஸ் வாகனம் மீது நடிகை ஜூலியின் கார் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஜூலியுடன் காரில் இருந்த காதலன் இப்ரான் தங்களை தாக்கியதாகவும், அவருக்கு ஆதரவாக 10 பேர் கொண்ட கும்பல் போலீசை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து வேப்பேரி காவல்நிலைய காவலர் பூபதி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. ஏற்கனவே ஜூலியை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வந்த ரசிகர்கள் தற்போது இந்த சம்பவத்தால் ஜூலியையும் அவரது காதலரையும் கழுவி ஊற்றி வருகின்றனர்.