பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிக கடுமையான விமர்சனங்களை பெற்றாலும் அந்த மோசமான விமர்சனத்தின் மூலம் ஜூலிக்கு பெரும் புகழ் கிடைத்தது மட்டுமே மிச்சம். பிக் பாஸில் கலந்து கொண்டதற்கே ஜூலி கிட்டதட்டக ₹20 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார்.
பிக் பாஸ் நிகக்ச்சிக்கு பின்னர் வெளியே வந்தவுடன் கிடைத்த புகழை வைத்து செம்மையாக காசு பார்த்துள்ளார் ஜூலி. கிட்டத்தட்ட அனைத்து பிரபலமான தொலைக்காட்சியிலும் பேட்டி கொடுத்து புகழை ஏற்றினார். இதன் மூலம் இவர் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு மணி நேரம் கலந்து கொள்ள பல ஆயிரம் சம்பளமாக பெற்றுவருகிறார் .
தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் அவர் அதில் மட்டும் அந்த நிகழ்ச்சி முடியும் வரை தொகுத்து வழங்க ₹ 10,00,000 வாங்கியுள்ளார்.
தற்போது கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு அப்பளக் கம்பெனி விளம்பரத்தில் நடித்தார். சில நொடிகளே வரும் இந்த விளம்பரத்தை ஜூலி எப்படியும் ஒரு நாள் சூட்டிங்கில் முடித்திருப்பார். ஆனால், இதற்கு அவர் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஒரு வருட ஒப்பந்தத்தில் மொத்தம் ₹10,000,00 சம்பளமாக வாங்க உள்ளார் என செய்தி வந்துள்ளது. இன்னும் மூழு நீல படங்களில் நடிக்க ஆரம்பிக்காத ஜுலி காட்டில் அதற்குள் பண மழை கொட்டி வருகிறது.