நீங்களும் பணத்துக்காக தான் அப்படி பண்றீங்க – அனிதா சம்பத்தின் காட்டமான பதிவிற்கு ஜூலியின் ரியாக்ஷன்.

0
3387
anitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் மிகவும் விமர்சிக்கப்பட்டார்கள். அதிலும் குறிப்பாக அர்ச்சனா, ரம்யா பாண்டியன், அனிதா, சுச்சித்ரா, சம்யுக்தா என்று பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிதும் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டனர். அவர்களை விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தினரை கூட கேலி மற்றும் ட்ரோல் என்ற பெயரில் அதிகம் விமர்சித்தனர். இதனால் ஒரு சில போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் முடிந்துவிட்டது எனவே பெண் போட்டியாளர்களை அவதூறாக பேச வேண்டாம். அனைத்து பெண்களையும் மதிப்பது நம் அனைவரின் கடமை. எனவே, இதுபோன்ற செயல்களை நிறுத்துங்கள் என்று ரம்யா பாண்டியனின் ரசிகர் பக்கம் ஒன்று பதிவிட்டு இருந்தது. இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவிட்டுள்ள அனிதா சம்பத், ஆம் இது ஒரு விளையாட்டு மட்டும்தான். அது முடிந்துவிட்டது. தினமும் நாம் 18 போட்டியாளர்களுடன் இருக்க மாட்டோம். அதனால் அப்படி ஒரு அழுத்தமான சூழல் தினமும் அனைவருக்கும் இருக்காது. எனவே, அங்கே வெளிப்பட்ட குணங்கள் அனைவருக்கும் தினமும் வெளிப்படாது என்றும் கூறி இருந்தார்.

இதையும் பாருங்க : IT ரெய்டு காரணம் அந்த பணம் தான் – ஒரு வருசத்துக்கு பின்னர் போட்டுடைத்த ராஷ்மிகா மந்தனா.

- Advertisement -

அனிதா சம்பத், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் யூடுயூப் சேனல்கள் மீது கடும் கடுப்பில் தான் இருந்து வருகிறார். யூடுயூப் சேனல்கள் சில தான் கூறிய கருத்துக்களை வேறு விதமான தலைப்புகளை போட்டு மக்களிடத்தில் வெறுப்பை உண்டாகி அதன் மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள் என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார் அனிதா சம்பத். இதனாலேயே இவர் எந்த யூடுயூப் சேனல்களுக்கும் பேட்டி கொடுக்காமல் தனது சொந்த யூடுயூப் சேனலில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இவரது யூடுயூப் சேனலில் வெளியிட்ட வீடீயோவை சில யூடுயூ சேனல்கள் வேறு விதத்தில் தலைப்பை போட்டு இருக்கிறார்கள் என்று கடுப்பாகி தனது இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் பதிவிட்ட அனிதா சம்பத், யூடுயூப் ரெவியூன்ற பேர்ல நம்மள நெகடிவ்வா பேசி பேசி மக்கள் கிட்ட வெறுப்பை உண்டாக்கி சம்பாதிக்க வேண்டியது. பிக் பாஸ் முடிஞ்சி வந்ததும் நம்மக்கிட்டயே இன்டர்வியூ கேட்டு கெஞ்ச வேண்டியது. யூடுயூப் ரெவியூக்கு பின்னால் இருக்கும் பண நோக்கம் பற்றி மக்கள் உணர வேண்டும்.

-விளம்பரம்-

சில யூடுயூப் ரெவியூவர் ஹீரோ,ஹீரோயின போல கொண்டாடுகிறார்கள். நாங்கள் புகழ் மற்றும் பணத்திற்காக தான் பிக் பாஸுக்கு போனோம் என்று சொல்கிறார்கள். அப்போ நீங்க மட்டும் சோசியல் சர்விஸ்காகவா ரெவியூ பண்ணிங்க. நீங்க மட்டும் பிரபலத்துக்கும், காசுக்காக தான பண்ணீங்க. எங்களை விட அவங்க தான் அதிக பணத்தை சம்பாதிச்சாங்க. ஒரு ரெவியூ வீடியோக்கே லட்ச லட்சமா யூடுயூப் சேனல்கள் சம்பாதிக்கறாங்க. இதுல விளம்பத்தின் மூலமாகவும் பணம் வருது என்று பதிவிட்டு இருந்தார். அனிதா சம்பத்தின் இந்த பதிவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டாரியில் பகிர்ந்துள்ள ஜூலி Thug life என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement