நீச்சல் போட்டியில் மாதவனின் மகன் புதிய சாதனை படைத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் மாதவன். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் எழுத்தாளர், படத்தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டுள்ளார். 2000 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்த அலைபாயுதே படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.
மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது மாதவன் படங்களில் மட்டும் இல்லாமல் வெப்சீரிஸ்களிலும் மாதவன் கிளப்பி வருகிறார். சமீபத்தில் மாதவனே இயக்கி நடித்திருக்கும் படம் ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’. இது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்திருக்கும் படம். இந்த படம் தமிழ் கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என ஐந்து மொழிகளிலும் வெளியாகி இருக்கிறது.
இதையும் பாருங்க : முழு நேர நடிகராக மாறி வரும் விஜய் சேதுபதியின் மகன் – வாய்ப்பு கொடுத்த தேசிய விருது பெற்ற இயக்குனர்.
மாதவன் மகன் :
இந்த படத்தில் சிம்ரன், சூர்யா உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இதனிடையே நடிகர் மாதவன், சரிதாவை 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார். தற்போது இவருக்கு 16 வயது ஆகிறது. வேதாந்த் விளையாட்டு துறையில் அதிக ஆர்வம் உள்ளவர். இதனால் இவர் நீச்சல் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். மேலும், இவர் பல நீச்சல் போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு பதக்கங்களையும் வென்று இருக்கிறார்.
நீச்சல் வீரன் வேதாந்த்:
அந்தவகையில் கடந்த செப்டம்பர் மாதம் பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் வேதாந்த் பங்குபெற்று இருந்தார். இதில் இவர் 7 பதக்கங்களை வென்று அசத்தி இருந்தார். பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் வேதாந்த் கலந்துகொள்ள இருக்கிறார். இதற்காக பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். தன்னுடைய மகனின் நீச்சல் பயிற்சிக்காக நடிகர் மாதவன் தன் மனைவியுடன் துபாய்க்கு குடி பெயர்ந்து விட்டார்.
வேதாந்த் கலந்து கொண்ட போட்டி:
மேலும், கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற்ற 800 மீட்டர் பிரிவில் வேதாந்த் தங்க பதக்கம் வென்று இருக்கிறார். இந்நிலையில் நீச்சல் போட்டியில் மாதவனின் மகன் புதிய சாதனை படைத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதாவது, புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் உள்ள பிஜு பட்நாயக் நீச்சல் குளத்தில் நடைபெற்று வரும் 48-வது ஜூனியர் நேஷனல் அக்வாடிக் சாம்பியன்ஷிப் போட்டியில் நடிகர் மாதவன் மகன் கலந்து கொண்டிருந்தார். அதில் ஆண்களுக்கான குரூப் 1, 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் போட்டியில் தேசிய அளவில் சாதனை படைத்து இருக்கிறார்.
மாதவனின் மகன் செய்த சாதனை:
நல்ல வேகத்துடன் திறமையாக முன்னோக்கி நீந்திய வேதாந்த் 16:01.73 வினாடிகளில் 2017-ஆம் ஆண்டில் தனது மாநில சக போட்டியாளர் அத்வைத் 16:06.43 வினாடிகளின் உருவாக்கிய சாதனையை முறியடித்தார். 16:21.98 வினாடிகளில் நீந்திய கர்நாடகாவின் அமோக் ஆனந்த் வெங்கடேஷையும், 16:34.06 வினாடிகளில் இலக்கை தொட்ட பெங்கால் வீரர் சுபோஜித் குப்தாவையும் வீழ்த்தி வெண்கலம் வென்றார். இதை மாதவன் மகிழ்ச்சியுடன் தன்னுடைய டுவிட்டரில் பகிர்ந்திருக்கிறார். இதை பார்த்த பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.