பெரும்பாலான நடிகைகளின் நிலை இதான் – சுரேகாவின் காட்சி நீக்கப்பட்டது குறித்து விஜய் டிவி நடிகை உருக்கமான பதிவு.

0
1265
- Advertisement -

மாஸ்டர் படத்தின் டெலீடட் காட்சியில் நடித்த விஸ்வாசம் பட நடிகை பற்றி விஜய் டிவி சீரியல் நடிகை ஆனந்தி தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேத்துப்பதி நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் படம் வெளியாகி 16 நாளில் அமேசான் பிரைமைல் வெளியானது. மாஸ்டர் திரைப்படத்தை பல்வேறு பிரபலங்களும் OTTயில் கண்டு கழித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் 4.50 நிமிட டெலீடட் வீடியோவை அமேசான் நிறுவனம் கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 6) வெளியிட்டது. ஏற்கனவே படத்தின் நீளம் கொஞ்சம் அதிகமாக இருந்ததால் பல காட்சிகளை கட் செய்து விட்டதாக லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார்.

-விளம்பரம்-
Jodi-Anandhi

இந்த வீடியோவில் சவிதாவிடம் (கௌரி கிஷன்) தவறாக நடந்து கொண்டதால் இரண்டு இளைஞ்சர்களை விஜய் அடித்து இருந்ததால் விஜய்யை கல்லூரி நிர்வாகம் அழைத்து கண்டிக்கும். அப்போது பெண்களை ஆண்களோடு பழக விடுவதாலும் பெண்கள் அவர்கள் இஷ்டத்துக்கு ஆடை அணிவதாலும் தான் அவர்கள் சவிதாவை அப்படி செய்தார்கள் என்று ஒரு ஆசிரியை கூற, அதற்கு விஜய் பெண்கள் அணியும் ஆடையை குறை சொல்லும் முன் ஆண்களுக்கு எப்படி ஒரு பெண்ணை தொட வேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள் என்று அறிவுறுத்துவார்.ஆடை பெயரில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அத்து மீறல்களை பற்றி சொன்ன இந்த காட்சியை ஏன் படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள் என்று பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் பாருங்க : நீங்களும் பணத்துக்காக தான் அப்படி பண்றீங்க – அனிதா சம்பத்தின் காட்டமான பதிவிற்கு ஜூலியின் ரியாக்ஷன்.

- Advertisement -

இந்த காட்சியில் விஸ்வாஸம் படத்தில் நடித்த சுரேகா வாணியும் நடித்து இருந்தது இந்த டெலிடட் வீடியோ வெளியான பின்னரே பலருக்கும் தெரியவந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் நடித்தும் படத்தில் இருந்து காட்சி நீக்கப்பட்டால் ஏற்படும் வலி குறித்து ஒரு மீம் வைரலானது. அதில், யோசித்து பாருங்க, கால் ஷீட் கொடுத்துவிட்டு ஒரு முக்கிய காட்சியில் நடித்துவிட்டு பின்னர் அதை நீங்கள் டெலீடட் வீடியோவில் கண்டால் அது மிகவும் வலிஎன்று குறிப்பிட பட்டு இருந்தது.

இந்த மீமை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நடிகை ஆனந்தி, நான் படத்திற்காக ஆவலுடன் காத்துகொண்டு இருக்கும் போது, பெரும்பாலும் இது போல சூழ்நிலை தான் பெரும்பாலான நடிகர்கள் சந்திக்கிறார்கள். என்னையும் சேர்த்து என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே, இதுகுறித்து பதிவிட்டு இருந்த சுரேகா, இந்த காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. ஆனால், தற்போது அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. இந்த வாய்பை கொடுத்த லோகேஷ் கனகராஜிற்கு நன்றி, சூப்பர் ஸ்டார் விஜயுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சி என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement