-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

இதே நாளில் 7 ஆண்டுக்குக்கு முன் தன்னை பற்றி விவேக் போட்ட பதவை பகிர்ந்த காஜல் – நிறைவேறுமா அவரது சொல் ?

0
694
kajal

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் காஜல் பசுபதி. மேலும், இவர் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகை காஜல்முதன் முதலில் நடிகையாக அறிமுகமானது வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில்தான். இந்த படத்தில் ஒரு செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் காஜல். அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான டிஷ்யூம் படத்தில் சந்தியாவின் தோழியாக படம் முழுவதும் நடித்திருந்தார். ஆனால், இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ விவேக் தான்.

-விளம்பரம்-

தமிழில் 2006 ஆம் ஆண்டு எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான கள்வனின் காதலி படத்தில் விவேக்கின் மனசாட்சியாக ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் காஜல் அதிலும் இந்த கதாபாத்திரத்தில் அவர் பேசிய ‘கலத்கா மக்கர்’ என்ற வசனம் மிகப்பெரிய பிரபலமானது. இந்த படத்தை தொடர்ந்து இவர் விவேக் உடன் பெருமாள், சிங்கம் என்று அடுத்த அடுத்த படங்களில் நடித்திருந்தார்.

இறுதியாக கலகலப்பு 2 படத்தில் நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இதே நாளில் 7 ஆண்டுக்கு முன் விவேக் தன்னை பாராட்டி போட்ட பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் காஜல். காஜல் பசுபதி மிகவும் திறமையான நடிகை அவருக்கு ஏன் இன்னும் ஒரு மிகப்பெரிய பிரேக் கிடைக்கவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது கடின உழைப்பும் உரிமையும் அர்ப்பணைப்பும் விரைவில் வெல்லும் என்று பதிவிட்டு இருக்கிறார் இதற்கு காஜல் பசுபதையும் நன்றி தெரிவித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

விவேக் இந்த பதிவை போட்டு 7 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும், கஜலால் தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை என்பது வருத்தம். விவேக்கின் வாக்கு விரைவில் பலித்து காஜல், தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிகரமான நடிகையாக வருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதே போல காஜல் பசுபதி சீரியல் நடிகைகளுக்கு சரியான வாய்ப்பு கிடைக்காததை சுட்டி காட்டி சில பதிவுகளை போட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

விக்ரம் படம் வெளியான போதே காஜல் பசுபதி தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் ‘சீரியல் ஆர்ட்டிஸ்ட் மூன்று பேரும் கமல் சார் படத்துல, விஜய் சேதுபதி ஜோடியா. சூப்பர் ஜி, எதுக்கு நாங்களும் சீரியல பண்ணி இருக்காமல் போல என்று பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர் ஒருவர் ‘நீங்களே ஏற்கனவே சில படங்களில் கலக்கி இருக்கின்றனர்’ என்று ஆறுதல் கூறியிருந்தார்.

அதற்கு காஜல் ‘தற்போது தாமதமாக தான் சீரியல் நடிகைகளை பெரிய படங்களில் அதிகம் பயன்படுத்துகின்றனர்’ என்று கூறி இருந்தார். அதே போல கடந்த ஆண்டு ஜூலை மாதம் விஜய் டிவி நிகழ்ச்சி குறித்து பதிவிட்டு இருந்த காஜல் ‘ ‘அடேய், விஜய் டிவி, எப்ப பாரு இப்படி மட்டும் தான் ஷோ பண்ணுவயா. மரியாதையா அடுத்த முற பிக் பாஸ் முரட்டு சிங்கிள்னு ஒரு ஷோ பண்ணு மேன் என்று குறிப்பிட்டு BiggBossJodiயையும் குறிப்பிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news