விஜய் பாடி லாங்குவேஜை மறைமுகமாக கிண்டலடித்தாரா தில் ராஜு ? வீடியோவை கண்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்.

0
411
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் நடித்த “வாரிசு” படம் உலகம் முழுவதும் வெளியாக இருந்தது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, குஷ்பு, சங்கீதா, பிரகாஷ் ராஜ் என பலர் நடடித்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகி இருகிறது. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பாளி இயக்கி, தில் ராஜு தயாரிக்கிறார். மேலும் கடந்த மாதம் 11ஆம் தேதி வெளியாகி இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று தற்போது வரையில் 300 கோடியை வசூல் செய்திருக்கிறது.

-விளம்பரம்-

நடிகர் விஜய்யின் தொடக்க கால சினிமாவில் அப்பா செண்டிமெண்ட், தங்கச்சி செண்டிமெண்ட், காதல், குடும்பம் என்று கதையை மையமாக கொண்ட படங்களில் நடித்து வந்த விஜய் தற்போது அரசியல், விவசாயம், தீவிரவாதம் போன்ற சமூக பிரச்சனைகளை சொல்லும் கதைகளில் நடித்து வருகிறார். இதனால் விஜய் குடும்ப படங்களில் நடிக்காதது ஒரு குறையாகவே விஜய் ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் தான் குடும்ப படத்தில் விஜய்யை காண விரும்பும் ரசிகர்களுக்கு பொங்கல் பரிசாக வாரிசு படம் வெளியாகியது.

- Advertisement -

வாரிசுடு தெலுங்கு படம் :

இந்த நிலையில் வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பான வார்சுடு திரைப்படம் தமிழுடன் ஒரே நேரத்தில்தான் உருவாக்கியது. அப்படிபட்ட நிலையில் கடந்த சில மாதனங்களுக்கு முன்னர் தெலுங்கு சினிமாவில் தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆனால் வாரிசு படத்தின் படப்பிடிப்பு மட்டும் தொடர்ந்து நடந்து வந்தது. இது சர்ச்சையாகிய நிலையில் இதற்கு வாரிசு படம் தமிழ் படம் என்றும் தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்யப்படுவதாகவும், படத்தை இரண்டு நாட்கள் தள்ளி வெளியிடுவதாகவும் கூறினார் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு.

சூப்பர்ஸ்டார் சர்ச்சை :

அதனை தொடர்ந்து “வாரிசு” படத்தின் இசை வெளியிட்டு விழாவில் உங்களுக்கு இந்த படத்துல டான்ஸ் வேணுமா, பைட் வேணுமா, சாங் வேணுமா என்று அனைத்தயும் விஜய் இந்த படத்தில் செய்திருக்கிறார் என்று கூறினார். அது தில் ராஜை இந்தியா முழுவதும் பிரபலமாக்கியது. அதே போல விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று பெரிய சர்ச்சையை கிளப்பினார். அந்த சர்ச்சை விஜய் தொடங்கி அவரது குடும்பம், சக நண்பர்க்ள், நடிகர்கள், விஜய்யுடைய கோடிக்கணக்கான ரசிகர்கள் வரையில் சென்று இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து வருகிறது.

-விளம்பரம்-

புதிய சர்ச்சை :

இப்படி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி தயாரிப்பாளர் தில் ராஜு தற்போது மீண்டும் “உங்களுக்கு நாக்குல சனி” என சொல்வதை போல புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது “பாலகம்” என்ற தெலுங்கு படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தில் ராஜு சென்றிருந்தார். அப்போது “வாரிசு” படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசிய பாணியில் பேசி விஜய் ரசிகர்களை கடுப்பாகியுள்ளார் தயாரிப்பாளர் தில் ராஜு..

மறைமுகமாக கலாய்த்த தில் ராஜு :

தில் ராஜு பேசுகையில் “இந்த படத்தில் டான்ஸ் இல்ல, பைட் இல்ல, அதோட முக்கியமா விஜய் சாரோட பாடி லாங்குவேஜ் இல்ல. ஆனா நல்ல பொழுதுபோக்கு இருக்கு என்று மறைமுகமாக தளபதி விஜய்யை விமர்சித்து கூறியுள்ளார். இந்நிலையில் “வாரிசு” படத்தில் விஜய் அதிகமான பாடிலாங்குவேஜ் காட்டியதாகவும் அதனால் தான் இப்படி தில் ராஜு பேசுகிறார் என ஒரு கூட்டமும், அதே போல “வாரிசு” படத்தின் வசூல் தில் ராஜுவுக்கு திருப்தி அளிக்காத காரணத்தினால் தான் இப்படி விஜய்யை கலாய்க்கிறார் என புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் தயாரிப்பாளர் தில் ராஜு.

Advertisement