பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இந்த வாரம் பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளர்களான சினேகன், ஆர்த்தி, சுஜா, காயத்ரி,வையாபுரி ஆகியோர் விருந்தினராக வந்துள்ளனர்.ஏற்கனவே ஓவியா, ஹரிஷ் கல்யாண் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து சென்ற நிலையில் இன்று (செப்டம்பர் 13) சீசன் 1 ன் வெற்றியளரான ஆராவ்வும் வந்துள்ளார்.
ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 1ல் பங்கேற்ற காஜல் மட்டும் இன்னும் பிக் பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக அழைக்கபடாமல் இருக்கிறார். தன்னை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைக்காத காரணத்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள காஜல் ‘யாரும் என்னை அழைக்கவில்லை, நானே பிக் பாஷை குறை சொல்லிட்டனே என்று பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான காஜல், கமல் அவர்களை மக்கள் குறை கூறுவது நியாயமில்லை என்று கருத்து தெரிவித்திருந்தார். அதற்கும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்தது. இதற்கிடையே ஞாயிற்று கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் காண்பிக்கபட்ட வாக்களிப்பு விவரம் குறித்த பட்டியலை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட காஜல், பிக் பாஸ் குறித்து சர்ச்சையான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
They won’t call me ? nandan BB ye korasollitanay https://t.co/7vQLVPs3zD
— Kaajal Pasupathi (@kaajalActress) September 13, 2018
அந்த பதிவில், பிக் பாஸ் டீம வெச்சி அவங்களே கூட வோட் போடலாம். சில கணினியை பயன்படுத்தி அதன் மூலமும் அவங்களாள வோட் விழவைக்க முடியும் . ஆனா இது கண்டிப்பா அவங்களே வோட் போட்டிருக்காங்கலே தவிர மக்கள் போட்ட வோட் இல்ல என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவால் தான் தன்னை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை என்று காஜல் குறிப்பிட்டுள்ளார்.