சீமராஜா திரை விமர்சனம்..!

0
2125
- Advertisement -

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்துள்ள சீமராஜா படம் இன்று (செப்டம்பர் 13) ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை பற்றிய திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.

-விளம்பரம்-

seemaraja

- Advertisement -

படம்:- சீமராஜா
இயக்குனர் :- பொன்ராம்
நடிகர்கள்:- சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, சிம்ரன்,லால், நெப்போலியன்
தயாரிப்பு :- 24 ஏ எம் ஸ்டூடியோ
வெளியான தேதி:- 13-09-2018

கதைக்களம்:

-விளம்பரம்-

படத்தின் தலைப்பிற்கு ஏற்றார் போல நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு ராஜ வம்சத்தை சேர்ந்த ஒரு இளைஞராக இருந்து வருகிறார்.ஆனால், எந்த வேலையும் செய்யாதா ஒரு வெட்டி ராஜாவாக இருந்து வருகிறார் இருப்பினும் ஊருக்குள் அவரை அனைவரும் மதிக்கின்றனர். வழக்கம் போல ஊருக்குள் சுற்றி வரும் ஒரு இளைஞராக இருந்து வரும் சிவகார்த்திகேயனுக்கு சமந்தாவை பார்த்தவுடன் காதல் வயப்பட்டுவிடுகிறார்.

sivakarthikeyan

ஆனால்,சமந்தா இருக்கும் ஊருக்கும் சிவகார்த்திகேயன் இருக்கும் ஊருக்கு ஏற்கனவே ஒரு வாய்க்கா தகராறு இருக்கிறது. அது என்னவேனில் இந்த இரு ஊருக்கும் ஒரு மார்க்கெட் தான் பிரச்சனையாக இருந்து வருகிறது. அந்த மார்கெட் எந்த ஊருக்கு சொந்தம் என்று பிரச்சனைவர சிவகார்த்திகேயன் தனது ஊருக்காக போராடுகிறார். இங்கு தான் சிம்ரனின் என்ட்ரி, நடிகை சிம்ரனும் உருக்குள்ளே ஒரு பெரிய ஆள் என்பதை போல காண்பிக்கின்றனர். பிறகு மார்க்கெட் பிரச்சனையில் சிம்ரன் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு முட்டிக்கொள்கிறது.

இறுதியில் அந்த மார்க்கெட் எந்த ஊருக்கு சொந்தம் என்பதற்காக ஒரு மல்லியுத்த போட்டி ஒன்றை வைக்கின்றனர். போட்டி என்றால் அதில் ஹீரோ தானே ஜெயிக்கவேண்டும் அதனால் அந்த போட்டியில் நடிகர் சிவகார்த்திகேயன் ஜெயித்துவிடுகிறார். சரி மார்க்கெட் பிரச்சனை முடிந்தது சிவகார்த்திகேயன்-சமந்தா காதல் என்னவானது என்று யோசிக்கும் போது தான் அதிலும் ஒரு பிரச்சனை வருகிறது.காதல் என்றதும் அதில் ஏதாவது பிரச்சனை இருக்க வேண்டும் அல்லவா அது தானே கமெர்சியல் சினிமாவில் முதல் விதி. அந்த பொறுப்பைதான் இந்த படத்தில் லாலுக்கு கொடுத்திருக்கின்றனர்.

samantha

நடிகை சமந்தா, லாலின் முதல் மனைவியின் மகள் என்பது தெரியவருகிறது. ஏற்கனவே லாலுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் மார்க்கெட் பிரச்சனையில் முட்டிக்கொண்டதல்லவா அதனால் சமந்தாவின் காதலுக்கு நோ சொல்லி விடுகிறார் லால். இறுதியில் மார்க்கெட்டை தனது ஊர் மக்களுக்காக சிவாமீட்டுக் கொடுத்தாரா, சமந்தாவுடன் சேர்ந்தாரா இல்லையா,என்பது தான் கதை.

பாசிட்டிவ்

இந்த படத்தின் பாசிட்டிவ் என்றால் நடிகர் சிவகார்த்திகேயன் தான். ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் என்று அனைத்தையும் ஒரு கை பார்த்துள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன்- சூரியின் காம்போ இந்த படத்திலும் கைகொடுத்துள்ளது. ஆனால், அந்த அளவிற்கு ஒன்றும் இல்லையே பாஸ் என்ற பீல் வருகிறது. படத்தின் இசையை இமான் ஓரளவிற்கு நன்றாக கொடுத்திருக்கிறார். ஒரு முழுமையான கமெர்சியல் படம் ஆனால், சற்று ஓக்கே என்ற அளவிற்கு தான் இருக்கிறது.

நெகடிவ்

உன்மையில் சொல்லப்போனால் படத்தின் பாசிட்டிவை விட நெகடிவ் தான் அதிகம் என்று கூறலாம். முதல் பாதி வரை படத்தின் கதை எப்போது வரும் என்ற காத்திருப்பு அலுத்து போய் விடுகிறது. சிம்ரன் ஒரு மாஸான வேடத்தில் நடித்திருந்தாலும் சற்று ஓவர் டோஸ் போல தெரிகிறது. சாரி சிம்ரன் நீங்க படத்துல பாதி ஜோதிகா மாதிரி கொஞ்சம் ஓவர் ஆக்ட்டிங் தான். மதுர ஸ்லாங் நமக்கு வரல.அதே போல படத்தின் கதையும் பழைய கதை தான் என்பதால் படத்தின் சுவாரசியம் என்பதே இல்லாமல் இருக்கிறது. இரண்டாம் பாதியெல்லாம் ரொம்ப நீளமாக இருப்பது போல ஒரு பீல் இருந்தது.

soori

படத்தின் இறுதி மதிப்பு

ஒரு கமெர்ஷியல் படத்தை கொடுக்க எந்த ஒரு லாஜிக்கும் தேவை இல்லை. ஆனால், இந்த படத்தில் அதனை கொடுக்க இயக்குனர் தவறிவிட்டார். காமெடியும் அந்த அளவிற்க்கு எடுபடவில்லை . மொத்தத்தில் சீமராஜா படத்திற்கு எங்களின் மார்க் 2/5 மட்டும் தான். சாரி சிவா பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்

Advertisement