சீமராஜா படத்தில் தல அஜித்தா..! என்ன விஷயம் தெரியுமா.? தெறிக்கவிட்ட ரசிகர்கள்.!

0
166
Ajith
Ajith

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான “சீமராஜா” திரைப்படம் இன்று (செப்டம்பர் 13) வெளியாகியுள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன்- சூரியின் காம்போ இந்த படத்திலும் இணைந்துள்ளது.

Thala
சிவகார்த்திகேயன்- சூரியின் காம்போ என்றால் காமெடியில் பஞ்சமே இருக்காது என்று தெரியும். ஆனால், இந்த படத்தின் சிவகார்த்திகேயன் முழுக்க முழுக்க ஒரு சீரிஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதே போல இந்த படத்தில் அஜித் ரெபரன்ச்ஸ் செய்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் ஒரு காட்சியில் சிவகார்திகேயனிடன், என் மருமகளுக்கு தலபுள்ள ஆம்பள புள்ள தான் வேணும் என்று கூற அதற்கு சிவகார்த்திகேயன், தலக்கே தல புள்ள பொம்பள புள்ள தான் போ போ என்று கூறுகிறார். இந்த காட்சிக்கு அரங்கமே அதிர்ந்துள்ளது.

அதே போல இதுவரை காமெடியில் கலக்கி வந்த சூரி இந்த படத்தில் சிக்ஸ் பேக் வைத்து அசத்தியுள்ளார். அவருக்கும் இந்த படத்தில் அஜித் ரெபரன்ஸை பயன்படுத்தியுள்ளனர். நடிகர் சூரி சிக்ஸ் பேக்கில் தோன்றும் காட்சியிலும் அஜித் நடித்த “வீரம் ” படத்தில் வரும் மாஸ் பி ஜி எம்மை பயன்படுத்தியுள்ளாராம்.