‘மூடிட்டு போடி, சனியன், எனக்குன்னே வருவாளுக’ – சீரியல் நடிகையை திட்டி தீர்த்த காஜல். இதான் காரணம்.

0
521
kajal
- Advertisement -

சமீபத்தில் சீரியல் நடிகை ஸ்ரீநிதி போட்ட பதிவை கண்டு காண்டாகி இருக்கிறார் டான் காஜல் பசுபதி. சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் காஜல் பசுபதி.காஜல் முதன் முதலில் வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் தான் நடித்தார். இந்த படத்தில் ஒரு செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான டிஷ்யூம் படத்தில் சந்தியாவின் தோழியாக படம் முழுவதும் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து சிங்கம், கோ, மௌனகுரு, கௌரவம், இரும்பு குதிரை, கலகலப்பு 2 போன்ற பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-
sreenidhi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக காஜல் கலந்து இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் மக்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானார். அதனை தொடர்ந்து படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.மேலும், கஜோல் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். சினிமா, நாட்டு நடப்பு என்று பல விஷயங்களைப் பற்றிப் போஸ்ட் போடுவார். அதுமட்டுமில்லாமல் சிலரை பங்கமாக மரண கலாய் செய்து இருக்கிறார்.

இதையும் பாருங்க : மீண்டும் இணைந்த மாஸ்டர் கூட்டணி, ‘விஜய்- 67’ எப்படிப்பட்ட கதை ?- லோகேஷ் கனகராஜின் பதிலால் ரசிகர்கள் உற்சாகம்.

- Advertisement -

ஸ்ரீநிதி போட்ட பதிவால் கடுப்பான காஜல் :

இந்த நிலையில் சீரியல் நடிகை ஸ்ரீநிதி சிம்பு குறித்து போட்ட பதிவால் கடுப்பாகி இருக்கிறார் காஜல். தற்போது இருக்கும் காலகட்டத்தில் சினிமா நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நடிகைகளும் ரசிகர் மத்தியில் ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தையே வைத்து வருகின்றனர். அதனால் சின்னத்திரை நடிகைகள் எது செய்தாலும் அது பேசு பொருளாக மாறிவிடுகிறது. இதனால் ஒரு சில சமயங்களில் சின்னத்திரை பிரபலங்கள் சர்ச்சையிலும் சிக்கிவிடுகின்றனர்.

This image has an empty alt attribute; its file name is 2-17-589x1024.jpg

சிம்புவை திருமணம் செய்துகொள்ள ஆசை :

அந்த வகையில் சமீபத்தில் அஜித்தின் வலிமை படம் குறித்து பேசி அஜித் ரசிகர்களால் தொல்லைகளை சந்தித்து வருபவர் சின்னத்திரை சீரியல் நடிகை ஸ்ரீநிதி. இதை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் பலரும் இவரை திட்டி தீர்த்து வருகின்றனர். அதிலும் சிலர் இவருக்கு கொலை மிரட்டலும் விட்டுவருவதாக கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் சிம்புவை திருமணம் செய்துகொள்ள ஆசையாக இருப்பதாக கூறி சர்ச்சையை கிளப்பி இருந்தார்.

-விளம்பரம்-

சிம்பு வீட்டின் முன் தர்ணா :

இப்படி ஒரு நிலையில் திடீரெனெ சிம்பு வீட்டின் முன்பு நடு இரவில் அமர்ந்து கொண்டு சிம்புவை கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.இதனை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்,மேலும் அந்த பதிவில் ,என்னால நம்ப முடியல எனக்காக சிங்கிள் ஆ இருந்துருக்காரு,பாத்துட்டு இருக்குறவங்க எங்களை சேர்த்து வைங்க,லேட்டா தான் புரிஞ்சது.

திட்டி தீர்த்த காஜல் :

இன்னோருத்தர நான் கல்யாணம் பண்ண மாட்டேன் ,ஜல்லிக்கட்டுக்கு மட்டும் போராட்டம்,லவ்வுக்கு போராட்டம் இல்லையா என கூறி அவர் வீட்டு முன்னாள் அமர்ந்து போராட்டம் செய்துவருவதாக கூறியுள்ளார். ஸ்ரீநிதியின் இந்த பதிவு பெரும் வைரலாக இந்த பதிவை பார்த்த காஜல் பசுபதி ‘முடியாது மூடிட்டு போடி’ என்று கமன்ட் போட்டுள்ளார். மேலும், ரசிகர் ஒருவர் ‘என்ன பேபி இது’ என்று கமன்ட் செய்ய அதற்க்கு காஜல் சனியன், எனக்குன்னே வருவாளுக என்று பதில் அளித்துள்ளார்.

Advertisement