மீண்டும் இணைந்த மாஸ்டர் கூட்டணி, ‘விஜய்- 67’ எப்படிப்பட்ட கதை ?- லோகேஷ் கனகராஜின் பதிலால் ரசிகர்கள் உற்சாகம்.

0
429
lokesh
- Advertisement -

விஜய்யின் 67வது படத்தை இயக்கப்போகும் இயக்குனர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். ‘பீஸ்ட்’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜூ இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள்.

இதையும் பாருங்க : சிவாஜி குடும்பத்தில் இருந்து நடிக்கவரும் அடுத்த வாரிசு – அதுவும் இந்த தேசிய இயக்குனர் படம் மூலம்.

- Advertisement -

‘தளபதி 66’ படம் பற்றிய தகவல்:

இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜா நடைபெற்றது. இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். மாஸ்டர், பீஸ்ட் போன்ற படங்களில் இருந்த அதே லுக்கில் தான் விஜய் இந்த படத்திலும் இருக்கிறார்.

விஜய் 67 படத்தின் இயக்குனர்:

ஏற்கனவே இந்தபடத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகிறது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய்யின் 67வது படம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தான் இந்த படத்தை இயக்க இருப்பதாக சில வாரங்களாகவே சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டிருந்தது.

-விளம்பரம்-

விஜய் 67 குறித்து லோகேஷ் அளித்த பேட்டி:

இந்த நிலையில் இந்த தகவலை லோகேஷ் கனகராஜ் கிட்டத்தட்ட உறுதி செய்திருக்கிறார். அதாவது சமீபத்தில் நடந்த விருது நிகழ்ச்சி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவரிடம் விஜய் 67 தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு லோகேஷ் கனகராஜ் கூறியிருப்பது, அந்த தகவலை மறுக்கவில்லை. அதேநேரம் விஜய் 67 தொடர்பாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவே அறிவிப்பார்கள் என்று கூறியிருந்தார். அதற்குப் பின்பு விஜய் 67 படம் மாஸாக இருக்குமா? கிளாஸாக இருக்குமா? என்று கேட்டிருந்தார்கள்.

லோகேஷ் இயக்கிய படம்:

அதற்கு லோகேஷ் கனகராஜ் இரண்டு விதமாகவும் இருக்கும் என்று கூறி இருந்தார். இப்படி லோகேஷ் கனகராஜ் அளித்திருந்த பதில் விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் விஜய் 67 வது படத்தை இயக்க போவது லோகேஷ் கனகராஜ் தான் என்ற தகவலும் தற்போது திட்டவட்டமாக உறுதியாகியுள்ளது. மேலும், கமலின் நடிப்பில் உருவாகி உள்ள விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படம் ஜூன் 3ஆம் தேதி வெளிவர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement