உண்மையான பிக் பாஸ் சீசன் ஆரம்பிச்சிடுச்சு. காஜல் போட்ட பதிவு ஏன் தெரியுமா ?

0
2409
kajalpasupathi
- Advertisement -

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்குதல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போது போரை விட பயங்கர அச்சுறுத்தல் விஷயமாக இருப்பது இந்த கரோனா வைரஸ் தான். சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் இந்த கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் இந்த கரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. இந்த கரோனா வைரஸினால் பல்லாயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் கவலையில் உள்ளார்கள். இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Image

மேலும், இந்த கரோனா வைரஸினால் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த கரோனா வைரசுக்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. கரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கரோனா வைரஸ் குறித்து பல பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிக் பாஸ் காஜல் பசுபதி இந்த கரோனா வைரஸ் குறித்து கருத்து ஒன்று பதிவிட்டு உள்ளார்.

- Advertisement -

இதையும் பாருங்க : கண்ணே போய் இருக்கும் – ரியாலிட்டி ஷோவால் கண்ணில் தையல் போடும் அளவிற்கு காயம் அடைந்த நீபா.

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை காஜல் பசுபதி. இவர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்து உள்ளார். காஜல் பசுபதி முதன் முதலில் சன் மியூசிக் டீவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவே தான் தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். அதன் பின்னர் கஸ்தூரி என்னும் மெகா தொடர் ஒன்றில் வில்லியாக நடித்தது இவருடைய வாழ்க்கையில் முக்கிய டர்னிங் பாய்ண்ட் ஆக அமைந்தது.

-விளம்பரம்-

நடிகை காஜல் முதன் முதலில் நடிகையாக அறிமுகமானது வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் தான். இந்த படத்தில் ஒரு செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் காஜல். அதைத் தொடர்ந்து டிஸ்யூம், கள்வனின் காதலி, பெருமாள், சிங்கம், கோ, வேலூர் மாவட்டம், மௌன குரு, கௌரவம், மாயை, என்னமோ நடக்குது, அதிதி, இரும்புக்குதிரை, கலகலப்பு 2 என பல படங்களில் நடித்தார்.

பின் நடிகை காஜல் பசுபதி அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக பங்குபெற்றார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவர் மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில் நடிகை காஜல் பசுபதி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனா வைரஸ் குறித்து குறித்து கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். தற்போது இது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

உண்மையாலுமே ரியல் பிக்பாஸ் இப்பதான் நடக்கிறது. இந்த கரோனா வைரஸ் மூலம் அரசாங்கம் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று சொன்ன உடன் குடும்பத்தில் உள்ள அனைவரும் வீட்டுக்குள்ளேயே உள்ளார்கள். இந்த கரோனா வைரஸ் அனைவரையுமே வீட்டுக்குள் பிக்பாஸ் போல் வீட்டுக்குள் பூட்டி வைத்துள்ளது என்று வேடிக்கையாகக் கூறி இருந்தார். இந்தியாவில் கருணா வைரஸினால் 115 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒரே ஒருவர் மட்டும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் தமிழக அரசு பள்ளி, கல்லூரி, அலுவலகம் என அனைத்திற்கும் மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை விடுத்துள்ளது. அதனால் அனைவரும் வெளியே வரவேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

Advertisement