தொலைக்காட்சியில் பல்வேறு விதமான கேம் ஷோக்கள் ஒளிபரப்பாகி கொண்டுதான் வருகிறது. தொலைக்காட்சிகள் ஒவ்வொன்றும் தனக்கு போட்டியான தொலைக்காட்சியை மிஞ்சும் விதமாக வெவ்வேறு வித விதமான கேம் ஷோக்களை நடத்தி வருகின்றன.ர் அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சூப்பர் மாம் 2 என்ற பெண்களுக்கான கேம் ஷோ நடந்துவந்தது . இந்த கேம் ஷோவில் முதல் சீசன் கடந்த ஆண்டு நிறைவடைந்தது. முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வந்தது .
இந்த சீசன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி துவங்கப்பட்டது. மேலும், இந்த சீசனை பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா தொகுத்து வழங்கி இருந்தார் . மிகவும் பரபரப்பாக நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி கடந்த மார்ச் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி இருந்தது. இதனால் இந்த சீசனில் வெற்றி பெறப்போவது யார் என்பதற்கான ஓட்டிகள் மிகவும் கடினமாக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்த கேம் ஷோவில் பங்கு பெற்றுள்ள நீபாவிற்கு எதிர்பாராவிதமாக விபத்து ஏற்பட்டு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருந்தார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் தனக்கு ஏற்பட்ட விபத்து குறித்து சமீபத்தில் பேட்டி அளித்துள்ள நீபா, அடிபட்டது உண்மைதான். கண் புருவத்துக்குப் பக்கத்துல பெரிய அடி. கொஞ்சம் எசகுபிசகா நடந்திருந்தா பார்வையே போயிருந்தாலும் ஆச்சர்யப்படறதுக்கில்லை.
இனிமே இந்த மாதிரி ஷோக்கள்ல கலந்துக்கிட்டா எச்சரிக்கையோட இருக்கணும்கிற பாடத்தைத் தந்திருக்கு இந்த விபத்து” என்று கூறியிருந்தார். இது ஒரு புறம் இருக்க இதே சூப்பர் மாம் நிகழ்ச்சியில் தனது மகள் போஷிகாவுடன் கலந்து கொண்டார் தாடி பாலாஜியின் மனைவியான நித்யா. மேலும், ரியாலிட்டி ஷோ மூலம் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூறியுள்ள அவர். “நானும் ரெண்டு சேனல்ல ரெண்டு ஷோவுல கலந்துட்டு வந்து கொண்டு இருக்கிறேன். ஆனால், தற்போது வரை ரியாலிட்டி ஷோ என்றால் என்ன என்று அர்த்தம் எனக்குப் புரியல.
இரெண்டு ஷோவிலும் கசப்பான அனுபவம்தான் கிடைச்சது. முதல்ல ஒரு டான்ஸ் ஷோ. அது ஒளிபரப்பான சமயத்துலதான் உண்மையிலேயே எனக்கும் என் கணவருக்கும் கருத்து வேறுபாடுஏற்பட்டது . விடிய விடிய வீட்டுல சண்டை போட்டுட்டு மறுநாள் காலையில ஷூட்டிங் ஸ்பாட் போய் எதுவுமே நடக்காத மாதிரி இருக்க முடியுமா சொல்லுங்க. அப்படி இருக்க வேண்டிய ஒரு சூழல்ல, என்னைக் கட்டுப்படுத்த முடியாம சில விஷயங்களைக் கேமரா முன்னாடியே பேசிட்டேன். சேனல் நினைச்சிருந்தா குடும்ப விவகாரம்னு அதை வெளியுலகத்துக்குக் காட்டாம தவிர்த்திருக்கலாம். ஆனா, நான் பேசியதையே ப்ரோமோவாக போட்டு ஃபேமிலி பிரச்னையை வெளியுலகத்துக்குத் தெரிய வெச்சிட்டாங்க” என்றார் `தாடி’ பாலாஜியின் மனைவி நித்யா.