பிக் பாஸ் அரங்கத்துக்குள் இன்று இருந்த பார்வையாளர்கள் யார் தெரியுமா.? கமல் என்ன சொன்னாலும் கை தட்றாங்க.!

0
1193
Kamal
- Advertisement -

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் இந்தாண்டு ஒளிபரப்புகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் பல்வேறு மாற்றங்களை இருந்து வருகிறது.கமல் அவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குளே சென்று எலிமினேஷனை அறிவித்தது பிக் பாஸ் வரலாரிலேயே முதல் முறை, அதே போல இந்த நிகழ்ச்சியின் மற்றுமொரு புது நிகழ்வாக இன்று (அதாவது சனிக்கிழமை) எலிமினேஷனை அறிவிக்க இருக்கிறார் நடிகர் கமல்.

-விளம்பரம்-

kamal bigg boss

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தான் எலிமினேஷன் ஆகும் நபரின் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்வரை ஒரு நாளைக்கு முன்னதாகவே எடுக்கப்பட்ட காட்சிகளை தான் அடுத்த நாள் தொலைக்காட்சியில் ஒளிபரப்புகின்றனர்.

ஆனால், இந்த வாரம் கமல் அவர்களுக்கு சனிக்கிழமை வேறு வேலை இருப்பதால் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் அறிவிற்பிற்கான நிகழ்ச்சியை நேற்று, அதாவது வெள்ளிக்கிழமையே படமாக்கப்பட்டது. இந்த விடயம் வெளிவரமால் இருக்க பிக் பாஸ் டீம் பல வேலைகள் செய்துள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்த வரை சனிக்கிழமை எலிமினேஷன் அறிவிப்பு நடைபெற்றுள்ளது பிக் பாஸ் வரலாற்றிலேயே தான் முதல் முறையாகும்.

-விளம்பரம்-

bigg boss

bigg boss kamal

பொதுவாக பிக் பாஸ் பார்வையாளர்கள் துணை நடிகர்களாக தான் இருப்பார்கள்.ஆனால், இம்முறை துணை நடிகர்களை அழைக்கவில்லை அவர்ளுக்கு பதிலாக கமல் அவர்களின் ரசிகர்களும், கட்சி தொண்டர்களும், விஜய் தொலைக்காட்சியின் வேலை புரிபவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இதற்கு முக்கிய காரணம், வெள்ளிக்கிழமை படப்பிடிப்பு நடைபெற்றது என்பது தெரியாமல் இருப்பதற்காக வெளிஆட்களை அனுமதிக்கவில்லை.

Advertisement