கேப்டனுக்கு நன்றி கடன் செலுத்த தளபதி எடுத்த அதிரடி முடிவு !

0
400
vijay actor

தமிழ் சினிமாவின் கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன் கடந்த 2015 அம ஆண்டு ‘சகாப்தம்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு பின்னர் நீண்ட இடைவெளிக்கு கடந்த 2018 இவரது நடிப்பில் வெளியான ‘மதுரை வீரன்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Shanmuga Pandian

இந்நிலையில் தற்போது நடிகர் சண்முகபாண்டியன் ‘சொல்லடா’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சண்முகபாண்டியனுக்கு சினிமாவில் ஒரு நல்ல திருப்புமுனை அமைய வேண்டும் என்று நடிக்கும் படத்தின் கதையை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறாராம் நடிகர் விஜய். சரி, விஜய் ஏன் சண்முகபாண்டியனிற்காக கதையை தேர்வு செய்ய வேண்டும்?

நடிகர் விஜய் குடும்பத்திற்கும், நடிகர் விஜயகாந்த் குடும்பத்திற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நடிகர் விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் , நடிகர் விஜயகாந்தை ‘சட்டம் ஒரு இருட்டறை ‘ என்ற படத்தில் அறிமுகம் செய்தார். அதன் பின்னர் தொடர்ந்து விஜயகாந்தை வைத்து பல்வேறு படங்களை இயக்கினார் எஸ் ஏ சந்திரசேகர்.

vijay

அதே போல நடிகர் விஜய் ‘நாளைய தீர்ப்பு ‘ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானாலும், விஜய்க்கு திரைத்துறைக்கு ஒரு சிறந்த எண்ட்ரியாக அமைந்தது விஜய்காந்த் நடித்த ‘ செந்தூர பாண்டி ‘ என்ற படம் தான். இந்நிலையில் நடிகர் விஜய், விஜயகாந்திற்கு நன்றிக்கடனாக அவரது மகன் சண்முகபாண்டியனுக்கு கதையை தேர்வு செய்ய உதவி வருகிறாராம்.