வனிதாவை தொடர்ந்து பிக் பாஸில் கலந்துகொள்ளப் போகும் விஜயகுமாரின் மகள் ? யார் தெரியுமா ?

0
1866
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் விஜயகுமாரின் மகள் கலந்து கொள்ள இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி அறிமுகமானது. முதல் சீசனை தொடர்ந்து தற்போது ஆறு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஆறு சீசன்களையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சி 100 நாட்கள் நடைபெறுகிறது.

-விளம்பரம்-

பிக் பாஸ் வீட்டுக்குள் புதுப்புது வித்தியாசமான டாஸ்க்களை கொடுத்து மக்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் பட்டத்தை வெல்லும் வெற்றியாளர்களுக்கு பரிசு தொகையாக 50 லட்சமும் கொடுக்கிறார்கள். மேலும், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. சமீபத்தில் தான் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்தது.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

இந்த நிகழ்ச்சியில் அசிம் டைட்டில் வின்னரானார். விக்ரமன் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார். தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த முறை நிகழ்ச்சியில் யார்? கலந்து கொள்ள போகிறார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் மத்தியில் அதிக ஆவல் ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலக்கப்போவது யாரு காமெடி நடிகர் சரத், பாவனா, மாகாபா, உமாரியாஸ் ஆகியோர் ஆடிஷனில் கலந்து இருப்பதாக கூறப்படுகிறது.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

அதோடு இந்த சீசனுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் இரண்டு வீடு என்று கமல் கூறி இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இந்த சீசனில் சோனியா அகர்வால், நடிகர் அஸ்வின், ஷகிலா, நடிகை கிரண் உடைய பெயர்கள் எல்லாம் அடிபட்டு வருகிறது. அதுமட்டும் இல்லாமல் விஜய் டிவி பிரபலங்கள் சார்பாக பாலா, ரவீனா, சாக்குளின், சுஜிதா ஆகியோரும் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜயகுமார் மகள்:

இந்த நிலையில் தனுஷ் பட நடிகையும், நடிகர் விஜயகுமாரின் இளைய மகளான ஸ்ரீதேவியும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. நடிகை ஸ்ரீதேவி தமிழ் சினிமாவில் தேவதையை கண்டேன். தித்திக்குதே போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார். இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த பின் கதாநாயகியாக ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். பின் இவர் திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் செட்டாகி விட்டார்.

ரீ என்ட்ரி கொடுத்த ஸ்ரீ தேவி:

சமீபத்தில் தான் இவர் தெலுங்கு ரியாலிட்டி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் மீடியாவிற்குள் நுழைந்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருக்கிறார். இவர் மீண்டும் படங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இவர் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. ஆனால், இன்னும் ஸ்ரீதேவி தரப்பிலிருந்து எந்த ஒரு உறுதியான தகவலும் வெளியாகவில்லை.

Advertisement