இந்த படத்த பாத்ததுக்கு தயாரிப்பாளர் தான் எனக்கு ஒரு கார் பரிசு கொடுக்கனும் – கார்த்திக் சிதம்பரம் பதிவு. எந்த படத்த சொல்றாரு ?

0
1293
karthik
- Advertisement -

ரஜினி ஜெயிலர் படத்தை காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் மறைமுகமாக கிண்டல் செய்திருக்கும் பதிவு தான் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மாஸ் காட்டி இருக்கிறது. ஆனால், சில ஆண்டுகளாக இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை. இதனால் இவர் ஜெயிலர் படத்தில் அதிக கவனம் செலுத்தி நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

அதற்கேற்ப நெல்சனின் முந்தைய படமான விஜயின் பீஸ்ட் படமும் படு தோல்வி அடைந்து இருந்தது. இதனால் நெல்சனும் கதைக்களத்தில் அதிக கவனம் செலுத்தி இருந்தார். மேலும், அதிக முயற்சிக்கு பின் ரஜினியின் “ஜெயிலர்” படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். படத்தின் ஒவ்வொரும் பாடலும் பட்டைய கிளப்பி இருக்கிறது.

- Advertisement -

ஜெயிலர் படம்:

இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் பாலன், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், மோகன் லால், விநாயகம் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் கடந்த மாதம் 10 ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இருந்தது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த பாடம் வசூலை வாரி குவித்து வருகிறது.

படத்தின் வசூல்:

மேலும், இந்த படம் இதுவரை 600 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனை அடுத்து படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் படத்தில் நடித்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் ஆகியோரை நேரில் சந்தித்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அவர்கள் அனைவருக்குமே காரை பரிசளித்திருக்கிறார். பின் ஜெயிலர் படத்தில் இருந்து தனக்கு வந்த லாபத்தில் மூலம் விருப்பப்பட்ட தொகையை அவர்களுக்கு காசோலையாகவும் கொடுத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

ஓடிடியில் வெளியான ஜெயிலர் :

இது தொடர்பான புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஜெயிலர் படத்தின் வெற்றியடைந்து படக்குழுவினர் கொண்டாடி இருந்தார்கள். பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே ஜெயிலர் படத்தை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். தற்போது இந்த படம் ஓடிடியிலும் வெளியாகி
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

எம் பி கார்த்தி சிதம்பரம் டீவ்ட்:

இந்த நிலையில் இந்த படத்தை பார்த்து காங்கிரஸ் எம் பி கார்த்தி சிதம்பரம் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், நேற்று இரவு ஒரு தமிழ் திரைப்படம் பார்த்தேன். அந்த திரைப்படம் பார்த்ததற்கு படத்தின் தயாரிப்பாளர் எனக்கு ஒரு சொகுசு காரை பரிசாக அளித்திருக்க வேண்டும் என்று கிண்டலாக கூறி இருக்கிறார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வெளியானது தொடர்ந்து ரஜினி ரசிகர்கள், இவர் ஜெயிலர் படத்தை தான் விமர்சித்து பதிவிட்டிருக்கிறார் என்று கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement