இன்னிக்கு மீன் மார்க்கெட், நகை துணி கடையெல்லாம் தொறந்து வுட்டுட்டு நாளைக்கு நம்மளை house arrest பண்ணி என்ன பயன்.

0
954
lockdown
- Advertisement -

நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் தமிழகத்தில் தற்போது இந்த வைரஸ் தீவிரமடைந்து உள்ளது.கொரோனா நோயை கட்டுப்படுத்த, உலகம் முழுக்க தடுப்பூசிகள், மருந்துகள் தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் பரவியுள்ள உருமாறிய கொரோனா மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகிறது. தமிழகத்தில் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் கொரோனா தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது.

-விளம்பரம்-

கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பல்வேறு நாடுகளில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. அதே போல தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனாவின் இரண்டாம் அலை அதிகரித்து வருவதால் கடந்த 10 ஆம் தேதி தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அப்போதும் மக்கள் பலர் பொது இடங்களில் பொருட்களை வாங்க முந்தியடித்தனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நேற்று மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் முன்பு இருந்த பல்வேரு தளர்வுகள் நீக்கப்பட்டு கடுமையான ஊரடங்காக அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் நேற்று மற்றும் இன்று மட்டும் பொது மக்கள் நலன் கருதி அணைத்து கடைகளையும் திறந்துகொள்ள அனுமதிப்பட்டு இருந்தது. இதனால் மளிகை கடைகள் மற்றும் காய் கறி கடைகளில் பொது மக்களின் கூட்டம் அலைமோதியது.

சரி, மளிகை மற்றும் காய் கரி கடைகளில் தான் இப்படி பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக இருக்கிறார்கள் என்றால் ஜவுளி கடைகளிலும் நகை கடைகளிலும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்து வருகின்றனர். இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கஸ்தூரி, முண்டியடிச்சி துணி நகை வாங்கலையின்னாதான் என்னவாம்? தாலிய விட தங்கம் தான் முக்கியமா போச்சா? சேப்டிய விட சேலை முக்கியமா ? கல்யாணம்/சடங்கு மாதிரி தவிர்க்கமுடியாத purchasesகு whatsapp, phone, online எல்லா option உம் இருக்கு. கடைக்கு போயி கொரோனாவை எதுக்கு வாங்கணும்?

-விளம்பரம்-

காலையில சென்னையை மூடிருவோம்னு நடுராத்திரி சொல்றது, நாளையிலிருந்து தமிழ்நாட்டை மூடிருவோம்னு நேத்து சொல்றது…இதெல்லாம் எதுல சேர்த்தினே புரியலையே ! இன்னிக்கு மீன் மார்க்கெட், நகை துணி கடையெல்லாம் தொறந்து வுட்டுட்டு நாளைக்கு நம்மளை house arrest பண்ணி என்ன பயன். இதை புரிஞ்சிக்க எனக்குதான் பகுத்தறிவு பத்தலை போல என்று நினைக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement