சமீபகாலமாகவே பல திரைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் நேரடியாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தமிழ் படங்களை தொடர்ந்து வாங்கி வெளியிடுகிறார்கள். நயன்தாராவின் நெற்றிக்கண், தற்போது விஜய் சேதுபதியின் அனெபெல் சேதுபதி போன்ற பல படங்கள் நேரடியாகவே தங்களுடைய தளத்தில் வெளியிட்டுள்ளார்கள். இந்த நிலையில் தற்போது இரு திரைப்படங்களை நேரடியாக வெளியிட உள்ளனர். சின்ன மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களுக்கு ஓடிடி ஆபத்பாந்தவனாக உள்ளது.
அதிலும் தமிழ்நாட்டில் திரையரங்களில் படங்களை வெளியிட பல போராட்டமாக இருக்கும். அதே போல் எதிர்பார்க்கும் திரையரங்குகளும். அப்படி கிடைத்தாலும் படத்தை ஒன்று இரண்டு தினங்கள் மட்டும் தான் வெளியிட அனுமதி தருவார்கள். இப்படி பல நெருக்கடிகள் இருக்கும் நிலையில் ஓடிடி ஒரு சிறந்த தளமாக உள்ளது. படமும், டீலும் அவர்களுக்கு ஒத்து வந்தால் முழுப்பணத்தை கையில் தந்து படத்தை வாங்கிக் கொள்வார்கள். விளம்பரம் உள்பட எந்தச் செலவும் செய்ய வேண்டியதில்லை.
இதையும் பாருங்க : சிவகார்த்திகேயன், அவர் படத்துல நடிக்க என்ன கூப்பிட மாட்டாரு, அதுக்கு காரணம் இதான் – லொள்ளு சபா மாறன்
ஆனால், ஓடிடி தளங்கள் படத்தை வாங்குவது அத்தனை சுலபமான விஷயமும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்நிலையில் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் முக்கியமான இரு படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. முதலில் லிப்ட் படம் வெளியாக உள்ளது. வினீத் வரபிரசாத் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் கவின், அம்ரிதா நடித்துள்ளனர். சின்ன பட்ஜெட் படங்களில் லிப்ட் படமும் ஒன்றும்.
இன்னொரு திரைப்படம் ஓ மண பெண்ணே. கார்த்திக் சுந்தர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளனர். இந்த படமும் அதிக அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இவ்விரு படங்களும் கூடிய விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நேரடியாக வெளியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.