பெட்ரூம் காட்சியில் தர்ஷன் லாஸ்லியா – மீம் மெட்டிரியலாக மாறிய கவின். வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

0
2648
kavin
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் பங்குபெறும் போட்டியாளர்களுக்கு நிச்சயம் பட வாய்ப்புகள் வந்துவிடும். பெரும்பாலும் பிக் பாஸில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பலரும் சினிமா வாய்ப்பை எதிர்பார்த்து தான் கலந்து கொள்கின்றனர். முதல் சீசனில் பங்குபெற்ற ஜூலி துவங்கி மூன்றாம் சீசனில் பங்குபெற்ற லாஸ்லியா வரை பலருக்கும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி சினிமா வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை நான்கு சீசனை கடந்து உள்ளது. இதில் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்றால் அது மூன்றாம் சீசன் தான்.

-விளம்பரம்-

இந்த சீசன் போது கே எஸ் ரவிக்குமார் போன் செய்து லாஸ்லியாவிற்கு பட வாய்ப்புகள் காத்துகொண்டு இருப்பதாக கூறி இருந்தார். அவர் வாய் முகுர்த்தத்திற்கு ஏற்றார் போல லாஸ்லியா அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆனார். ஆனால், மூன்றாம் சீசனில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தர்ஷனுக்கு தான் எந்த பட வாய்ப்புகளும் அமையாமல் இருந்தது.

இதையும் பாருங்க : என்னது, இது தான் ஜீவாவின் ஒரிஜினல் ஹேர் ஸ்டைலை – இப்போ அவர் வைத்திருப்பது விக்காமே.

- Advertisement -

இப்படி மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் தமிழ் ரீமேக்கில் பிக் பாஸ் சீசன் 3 பிரபலம் தர்ஷன் ஹீரோவாக நடிக்கஇருக்கிறார். கே எஸ் ரவிகுமார் தயாரிக்கும் இந்த படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக லாஸ்லியா நடிக்கிறார். பிக் பாஸுக்கு பின் கவினுடன் ஜோடி சேர்ந்து நடிப்பார் என்று என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது லாஸ்லியா தர்சனுடன் ஜோடி போட்டுள்ளார்.

சமீபத்தில் தான் இந்த படத்தின் டீசர் வெளியாகி இருந்தது. இந்த டீசரை பார்த்து பலர் வாழ்த்துக்களை சொன்னாலும் தர்ஷன் – லாஸ்லியாவை அண்ணன் தங்கையாக பார்த்துவிட்டு தற்போது இப்படி ரோமன்ஸ் செய்வதை பார்க்க முடியவில்லை என்று கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-

அதே போல இந்த டீசரின் ஒரு காட்சியில் தர்ஷன் – லாஸ்லியா இருவரும் கட்டிலில் ரோமன்ஸ் செய்வது போல காட்சியும் இடம்பெற்று உள்ளது. இதை பார்த்து பலர் கவினை கேலி செய்து வருகின்றனர். லாஸ்லியாவின் பழைய காதலரான கவினுடன் சேர்த்து வைத்து மீம்ஸ் கிரியேட் செய்துள்ளனர். இந்த மீம்ஸ்கள் தான் இணையத்தில் ட்ரெண்டில் உள்ளது.

Advertisement