சினிமால ரீ – என்ட்ரி மாதிரி அரசியல்லையும் ரீ -என்ட்ரி கொடுப்பீர்களா ? கேள்வியால் கடுப்பான வடிவேலு.

0
3041
vadivelu
- Advertisement -

ஷங்கர் மற்றும் வடிவேலுவுக்கு இடையிலான பிரச்சனை தற்போது சுமுகமாக தீர்க்கப்பட்டு வடிவேலுவிற்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு நீக்கப்பட்டுள்ளது.இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள வடிவேலு, நடிப்பதற்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டை நீக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு நல்ல நேரம் பொறந்தாச்சு. இது எனக்கு மறுபிறவி. லைகா நிறுவனம் தயாரிப்பில் 5 படங்களில் நடிக்கவுள்ளேன். இந்த சந்தோஷத்தில் எனக்கு 20 வயது குறைந்துவிட்டது.

-விளம்பரம்-

மீண்டும் சினிமாவில் நான் தோன்றப்போவது முதன் முதலில் நான் வாய்ப்பு தேடும் போது ஏற்பட்ட உணர்வு போல் இருக்கிறது என்று மிகவும் நெகிழ்ச்சியாக பேசி இருந்தார். இப்படி ஒரு நிலையில் பிரபல செய்தி சேனல் ஒன்று வடிவேலுவுக்கு வாழ்த்து சொல்ல போனில் தொடர்பு கொண்ட போது அவரிடம் ‘அரசியலுக்கு முன்ன மாதிரி வருவீங்களா ‘ என்று கேட்கப்பட்டதற்கு கொஞ்சம் டென்சன் ஆன வடிவேலு, பேசிட்டு இருக்கும் போது, உள்ள குச்சிய விடக்கூடாது, என்ன மீண்டும். மீண்டும் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையும் பாருங்க : பெட்ரூம் காட்சியில் தர்ஷன் லாஸ்லியா – மீம் மெட்டிரியலாக மாறிய கவின். வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

- Advertisement -

பத்தாண்டுகளுக்கு முன் தேர்தல் பிரசாரத்தில் திமுகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்திருந்த வடிவேலு, அதன்பிறகான நிகழ்வுகளால் மனம் நொந்து போனார். அதிலும் தன்னை தூக்கிவிட்ட விஜயகாந்த் மற்றும் தன் சினிமா வாழ்க்கையில் உறுதுணையாக இருந்த சிங்க முத்து போன்றவர்களை கடுமையாக விமர்சித்து அவர்களின் விரோதத்தை சம்பாதித்து கொண்டார் வடிவேலு.

அதே போல இவர் திமுகவுக்காக பிரசாரம் செய்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று விட்ட நிலையில், தொடர்ந்து வடிவேலுவை படங்களுக்குக் கமிட் செய்வதில் தயாரிப்பாளர்கள், மற்றும் இயக்குநர்கள் தயங்கியதாலேயே நடிப்பிலிருந்து ஒதுங்க வேண்டிய நிலை வந்தது என்பது கூறிப்பிடதக்கது. அதனால் தான் தற்போது அரசியல் பேச்சை எடுத்ததும் டர்ராகி இருக்கிறார் வடிவேலு.

-விளம்பரம்-
Advertisement