நமீதா போன்ற ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தத்தை முடித்த வேதாளம் பட வில்லன்.!

0
1836
Kabeer-Singh
- Advertisement -

தமிழில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ’வேதாளம்’, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானவர் பிரபல நடிகர் கபீர் துஹான் சிங்.

-விளம்பரம்-
Image result for Kabir Duhan Singh Vedhalam

32 வயதான இவர் ஹரியானவை சேர்ந்தவர். ஆரம்ப காலத்தில் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்த இவர் அதன் பின்னர் இந்தியில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘ஜில்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் தொடர்ந்து படங்களில் நடிக்க துவங்கினார்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த ரஜினிகாந்தின் புகைப்படம் நீக்கப்பட்டது.! ரசிகர்கள் அதிருப்தி.! 

- Advertisement -

தமிழில் வேதாளம் படத்திற்கு பின்னர் விஜய் சேதுபதியின் ’றெக்க’, ’மெஹந்தி சர்க்கஸ்’, ’காஞ்சனா 3’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார் கபீர் துஹன் சிங். இப்போது சித்தார்த் நடிக்கும் ’அருவம்’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

ஹரியானாவைச் சேர்ந்த இவர் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கில் முன்னணி வில்லன் நடிகராக இருக்கிறார். இவரும் இந்தி பட பின்னணி பாடகி டோலி சிந்துவும் காதலித்து வந்தனர். 

-விளம்பரம்-

இந்நிலையில் இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடந்துள்ளது. இதை, கபீர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

Advertisement