கவினை சோகத்தில் ஆழ்த்திய மரணம். உருக்கமுடன் பதிவிட்ட கவின். யார் தெரியுமா அவர் ?

0
37661
kavin

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. சொல்லப்போனால் இந்த சீசனுக்கு முன்னாள் ஒளிபரப்பான இரண்டு சீசன்களை விட இந்த சீசன் தான் மிகவும் ஹிட் அடைந்தது. மேலும் இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள் அந்த வகையில் கவினும் ஒருவர். கவின் அவர்கள் படிக்கும் போதே ஆர்.ஜே மற்றும் எஃப்எம் சேனல்களில் பணியாற்றினார். சினிமா துறையில் மீது இருந்த ஆர்வத்தினால் முதலில் நண்பர்களின் உதவியால் குறும்படங்கள் நடிக்க ஆரம்பித்தார்.

மேலும், நடிப்பைக் கற்றுக் கொள்ள கூத்துப்பட்டறையில் சேர்ந்து மூன்று மாதங்கள் பயிற்சியும் எடுத்துக் கொண்டார். இவர் நடித்த குறும்படங்களின் மூலமாக தான் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. மேலும், 2011 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ” கனா காணும் காலங்கள்” என்ற சீரியல் மூலம் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். அதற்கு பின் பிரபலமான சீரியல் ஆன சரவணன் மீனாட்சி சீரியலில் ‘வேட்டையன்’ என்கிற சரவண பெருமாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே அதிக வரவேற்ப்பையுயும், அன்பையும் பெற்றார்.

- Advertisement -

இதையும் பாருங்க : அப்புறமா டெலீட் செய்து விடுவேன். வித்யு ராமன் பதிவிட்ட புகைப்படம். வேண்டாம் என்று புலம்பும் ரசிகர்கள்.

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் இவருக்கு 2015 ஆம் ஆண்டு ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டும் இல்லாமல் இன்று நேற்று நாளை, முடிசூடா மன்னன் ஆகிய படங்களில் கௌரவ வேடத்தில் கவின் நடித்து உள்ளார். பின் தான் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவினுடைய வாழ்க்கையே மாறியது என்று சொல்லலாம். தற்போது ஒரு படத்தில் கூட கவின் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.

-விளம்பரம்-

அந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தநிலையில் கவின் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் வாழ்க்கையை எப்போதும் கணிக்கமுடியாது. நம்முடைய நேரம் எப்போது வரும் என்பதையும் கணிக்க முடியாது. எனவே, உங்களுக்கு நெருக்கமானவர்களை எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும் கமல்ராஜ் என்று பதிவிட்டுள்ளார். கவின் குறிப்பிட்டிருந்த கமல்ராஜ்கவினின் தீவிர ரசிகர். இவர், கவின் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது ட்விட்டரில் பல்வேறு ஆதரவுகளை தெரிவித்து வந்தார். மேலும், கடந்த 12ஆம் தேதி தான் நான் சிகிச்சைக்காக செல்லவிருக்கிறேன் அதனால் ஒரு சில மாதம் என்னால் டுவிட்டரில் வர முடியாது என்று கமல் பதிவிட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement