குடும்ப பிரச்சனை குறித்தும், வெளியேறிய காரணம் குறித்தும் முதன் முறையாக உருக்கமாக பேசிய கவின்.!

0
9039
Kavin
- Advertisement -

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஒளிபரப்பி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 100 நாட்களை கடந்துள்ளது. இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் இந்த சீசனில் வெற்றி பெறப்போவது யார் என்பது இந்த வாரத்தின் இறுதியில் தெரிந்துவிடும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் அதில் ரசிகர்களின் அதிக ஆதரவை கொண்டவராக இருந்து வந்தார் கவின் தான். ஆனால் கடந்த வாரம் கவின் பிக்பாஸ் அறிவித்த 5 லட்ச ரூபாய் பரிசுத் தொகையை எடுத்துக் கொண்டு வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

-விளம்பரம்-
kavin-kamal

கடந்தவாரம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த முகெனை தவிர மற்ற அனைவருமே நாமினேஷனில் இடம் பெற்றனர். எல்லா வாரமும் போல கவின் தான் கடந்த வாரம் நடைபெற்ற ஓட்டிங்கில் அதிக வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருந்து வந்தார். எனவே, கவின் இருந்திருந்தால் அவர் நிச்சயம் தகுதி பெற்று இருந்திருப்பார். அதேபோல பிக்பாஸில் இருந்து கவின் வெளியேறிய போதும் கவினுக்கு இருந்த ஆதரவு என்னவென்று பலரும் அறிந்தனர். பிக்பாஸில் இருந்து வெளியேறிய இத்தனை நாட்கள் ஆன பின்னர் முதன்முறையாக தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார்.

இதையும் பாருங்க : தர்ஷன் வெளியேற்றம் குறித்து ட்வீட் செய்த காயத்ரி.! இவர்கள் இருவரில் யாராவது தான் வின்னராம்.!

- Advertisement -

அந்த பதிவில், முதலில் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றதற்கான முதல் காரணமே நான் மிகவும் மோசமான கட்டத்தில் கிடந்தேன். நான் முயற்சி செய்த எதிலும் நான் வெற்றி பெறவில்லை. எனவே, கடந்த இரண்டு வருடங்களாக என்னைத் தொலைத்த நான் இந்த வாய்ப்பின் மூலம் என்னை மீண்டும் கொண்டு வந்து விடலாம் என்று நினைத்தேன். நான் நம்பிக்கையோடு தான் உள்ளே சென்றேன். அங்கே கிடைக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தி என்னை நான்நிரூபிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதைத் தவிர நான் எதையும் நினைக்கவில்லை. எனக்கு கொஞ்சம் பணமும் கொஞ்சம் பிரபலம் மட்டும்தான் இதன் மூலம் நான் எதிர்பார்த்தேன். ஆனால், தற்போது எனக்கு கிடைத்த பிரபலத்தை என்னால் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை என்று தான் நினைக்கிறேன். எனக்கு இருக்கும் பிரச்சனைகளில் தற்போது அதனை என்னால் அனுபவிக்க முடியவில்லை. நீங்கள் எனக்கு காட்டிய அன்பிற்கு பதிலளிக்க முடியாத நிலையில் நான் இருக்கிறேன். எனக்கு நீங்கள் கொடுத்த அனைத்து அன்பிற்கும் நன்றி. அதேபோல எனது குடும்பத்தை காப்பாற்றுவதும் முக்கியம்.

இவை அனைத்தையும் தாண்டி இது வெறும் ரியாலிட்டி ஷோ தான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அது எனக்கும் புரிந்து கொள்ள சில நேரம் ஆகியது. ஆரம்பத்தில் ஒரு கதாபாத்திரமாக தான் நான் நடித்து வந்தேன். ஆனால், அது மற்றவர்களின் உணர்வு சம்பந்தப்பட்டது என்பதை ஒரு கட்டத்தில் உணர்ந்து எனது உணர்வுகளை நான் கட்டுப் படுத்திக் கொண்டேன். இந்த நிகழ்ச்சியில் உள்ள ஒரு சிலர் என்னால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்காக சொல்லவில்லை இருப்பினும் எனது தவறை நான் ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் என்மீது காட்டிய அன்பை எப்படி ஏற்றுக் கொள்கிறோம் அதே அளவு நீங்கள் என்மீது காட்டும் வெறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேனோ அதே அளவு கண்டிப்பாக என்னை வெறுப்பவர்கள் குறையும் வகையில் எனது வாழ்க்கையை நான் நன்றாக வாழ்வேன். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற 17 நபர்களும் எனக்கு ஒரு நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்தீர்கள். அது இத்தோடு முடியப் போவதில்லை உங்கள் அன்பிற்கு நான் எப்போதும் நன்றி கடன் பட்டுள்ளேன். ஒருவேளை எந்த விதத்திலாவது நான் யாரையாவது காயப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். என்னை பொறுத்தவரை எனக்கு நான் நேர்மையாக இருக்கிறேன். அதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை உங்கள் யாரையாவது காயப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் எப்போதும் போல இருங்கள் எல்லோரும் நன்றாக இருப்போம்.

-விளம்பரம்-
Advertisement