கனா காணும் காலங்கள் வெற்றியை ஞாபம் இருக்கா? சமீபத்தில் நடைபெற்ற அவரின் திருமண புகைப்படம்.

0
49147
Prem
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் இளசுகளை டார்கெட் செய்து உருவாக்கப்பட்ட கனா காணும் காலங்கள் தொடரை 90ஸ் ரசிகர்கள் கண்டிப்பாக மறக்கமுடியாது. 90களில் பிறந்தவர்களுக்கு இந்த தொடர் மிகவும் பிடித்தமான தொடராக இருந்து வந்தது .பள்ளி செல்லும் சிறுவர்களை டார்கெட் செய்து ஒளிபரப்பான இந்த தொடர் அப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் டிஆர்பியில் டாப்பில் இருந்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இந்த தொடருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற தொடர்கள் ஒளிபரப்பானது. கனா காணும் காலங்கள் தொடரைப் போலவே கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற இரு தொடர்களும் மாபெரும் வெற்றி தொடராக அமைந்திருந்தது. இந்த தொடரில் நடித்த பல்வேறு நடிகர் நடிகைகள் பின்னர் தொலைக்காட்சிகளிலும் வெள்ளித்திரையிலும் நடிகர் நடிகைகளாக திகழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் காமெடி நடிகர் பாண்டி, பிக் பாஸ் கவின், செம்பருத்தி கார்த்தி என்று ஏராளமானவர்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

இதையும் பாருங்க : கடற்கரையில் பிறந்தநாளை கொண்டாடிய எமி. என்னது ? இவங்க வயசு 30 தாண்டலயா. எவ்ளோ வயசு தெரியுமா.

- Advertisement -

இந்த தொடரை நீங்கள் மிஸ் செய்யாமல் பார்த்து இருந்தால் கண்டிப்பாக வெற்றி என்ற கதாபாத்திரத்தை நீங்கள் கண்டிப்பாக மறந்திருக்க மாட்டீர்கள். கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை தொடரில் வெற்றி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் பிரேமிர்க்கு அப்போது கவினைவிட மாபெரும் ரசிகர்கள் பட்டாளம் இருந்துவந்தது. குறிப்பாக இவருக்கு பெண்கள் மத்தியில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து வந்தார்கள். இந்த நிலையில் நடிகர் பிரேம், சுஷ்மா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

View this post on Instagram

Nalla iru macha.. ? #PremWedsSushma

A post shared by Kavin M (@kavin.0431) on

அதுமட்டுமல்லாமல் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த பல்வேறு பிரபலங்களும் பிரேம் மற்றும் சுஷ்மாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். இந்த திருமணத்தின் மூலம் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த நட்சத்திரங்கள் ஒரு ரியூனியன் போல செய்திருந்தார்கள். மேலும், பிக் பாஸ் கவின் தனது சமூக வலைதளத்தில் பக்கத்தில் நல்லா இரு மச்சான் என்று பிரேம் அவர்களின் திருமணத்தின் போது எடுத்த ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement