விஜய் தொலைக்காட்சியில் மிகப்பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டும் இருக்கும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க சமையல் நிகழ்ச்சி ஆகும். சமையல் நிகழ்ச்சி என்றால் மற்ற நிகழ்ச்சிகளை போல அனைவரும் சமையல் தெரிந்து வந்து செய்வது கிடையாது. சமையல் தெரிந்தவர்களுடன் சமையல் செய்ய தெரியாதவர்கள் இணைந்து செய்யும் நிகழ்ச்சி ஆகும். விஜய் டிவி இந்த முறை சமையல் நிகழ்ச்சியில் ஒரு புது மாதிரியான அட்ராசிட்டியை கொண்டு வந்து உள்ளது. மேலும், ஒவ்வொரு வாரமும் புதுப்புது டிஸ் உடன் போட்டியாளர்கள் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லை. அதுவும் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு புது நிபந்தனையுடன் போட்டி தொடங்கும்.
இதுவரை வந்த சமையல் நிகழ்ச்சியை விட இந்த சமையல் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் விரைவாக பிரபலம் அடைந்தது என்று சொல்லலாம். தற்போது இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் யார் வெல்ல போகிறார்கள்? என்று ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அந்த அளவிற்கு அனைவரும் பிரமாதமாக சமையல் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்நிகழ்ச்சி குழுவினரை சந்திக்க நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் வந்து உள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் இந்த நிகழ்ச்சி குழுவினரை சந்தித்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு விஜய் டிவி தாய் வீடு தானே.
இதையும் பாருங்க : கனா காணும் காலங்கள் வெற்றியை ஞாபம் இருக்கா? சமீபத்தில் நடைபெற்ற அவரின் திருமண புகைப்படம்.
இவர் திரையுலகில் செல்வதற்கு அடித்தளம் போட்டதே விஜய் டிவி தான். ஏனென்றால் விஜய் டிவி மூலம் தான் பல நடிகர்கள் வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் தொகுபகிளராகவும் ,காமடியனாகவும் தனது பயணத்தை தொடங்கி தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் மிகப் பிரபலமான நடிகராக விளங்கி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தவர். அதற்குப் பின்னர் தான் சினிமா படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் நடிகர் மட்டுமல்லாமல் சிங்கர், கம்மிடியன், மிமிக்கிரி, தொகுப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர். பின் படி படியாக உழைத்து முன்னேறி உள்ளார். கடந்த ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான படம் ‘நம்ம வீட்டு பிள்ளை’. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. பின் ஹீரோ என்ற படத்தில் நடித்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் குக் வித் கோமாளி குழுவினரை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை தொகுப்பாளினி மணிமேகலை அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஷேர் செய்தும் லைக் செய்தும் வருகிறார்கள். ஹீரோ படத்தை தொடர்ந்து தற்போது சிவர்கார்த்திகேயன் நடித்து கொண்டு இருக்கும் படம் டாக்டர். இந்த படைத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்துடன் இன்னொரு படத்திலும் நடிகர் சிவகார்த்திகேயன் கமிட்டாகி உள்ளார்.